அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் பாடம் நடத்தலாமா?:அமைச்சரின் அறிவிப்பால் குழப்பம்

Updated : மே 29, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஆன்லைனில் பாடம் நடத்தலாமா?:அமைச்சரின் அறிவிப்பால் குழப்பம்

சென்னை:''தனியார் பள்ளிகள், ஆன்லைன் வழியாக, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தக் கூடாது,'' என, முதலில் அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன், ''தனியார் பள்ளிகள் ஆன்லைனில், மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த தடையில்லை,'' என, மீண்டும் மாற்றி அறிவித்ததால், மாணவர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

ஊரடங்கு காரணமாக, பள்ளிகள், கல்லுாரிகள், தொடர் விடுமுறையில் உள்ளன. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது, இன்னும் உறுதியாகவில்லை. இதனால், ஜூன், 1 முதல், ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த, தனியார் பள்ளிகள் ஏற்பாடுகள் செய்துள்ளன. புதிய கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தை, ஆன்லைனில் செலுத்தும்படியும், மாணவர்களை பள்ளிகள் வலியுறுத்தி உள்ளன.


இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அளித்த பேட்டி:
பள்ளிகளை திறப்பதற்கு, தற்போது, அரசு அனுமதி அளிக்கவில்லை. எந்த பள்ளியும், ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தவும், இன்னும் அனுமதி தரப்படவில்லை. அவ்வாறு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது, பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.
மேலும், ஊரடங்கு அமலில் உள்ள போது, கல்வி கட்டணம் வசூலிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதை மீறி, கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக, ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தரும் அறிக்கை அடிப்படையில், பாடத்திட்டத்தை குறைப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

அமைச்சரின் இந்த பேட்டி, தொலைக்காட்சிகள் மற்றும் இணைய தளங்களில், உடனே வெளியானது.
இந்நிலையில், ஊடக அலுவலகங்களுக்கு, தொலைபேசியில் அமைச்சர் அளித்த பேட்டியில், ''ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக மாணவர்களை வரவழைத்து, வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தான் அரசு முடிவெடுத்துள்ளது,'' என, விளக்கம் அளித்தார்.
சில மணி நேரத்தில், அமைச்சரின் இரண்டு விதமான அறிவிப்புகள் வெளியானதால், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்த, தெளிவான அறிவிக்கையை, பள்ளி கல்வித்துறை வெளியிட வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு எப்போது?
அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
பிளஸ் ௨ விடைத்தாள் திருத்த, ஆசிரியர்கள் அனைவரும், சரியான நேரத்திற்கு வந்து விட்டனர். அதற்கான முழு ஏற்பாடுகளும், தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு குறித்து, நிலைமைக்கேற்ப முதல்வர் முடிவு செய்வார். சுழற்சி முறையில், மாணவர்களை வரவழைத்து, பாடம் நடத்துவது குறித்தும், முதல்வர் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, பின், முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பான குழுவுக்கு, விரைவில், தலைவர் நியமிக்கப்படுவார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
28-மே-202018:40:22 IST Report Abuse
Tamil 12 ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு மட்டும் தான் ஆன்லைன் வகுப்புகள் தேவைப்படும். மற்றவர்களுக்கு தேவை இல்லை. IIT மற்றும் நீட் தேர்வு தற்பொழுது 12 ஆம் வகுப்பிற்கு போகும் maths science மற்றும் computer சயின்ஸ் குரூப் மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்பு தேவை. மற்றவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தேவைப்படாது. பல தனியார் பள்ளிகள் இந்த வருட பீஸ் பிடுங்குவார்க்கு என்று தரமற்ற ஆன்லைன் வகுப்புகளை தகுதியற்ற ஆசிரியர்கள் மூலம் பெயரளவிற்கு நடத்த படுகிறது. கட்டாய பீஸ் வசூல் செய்ய அமைச்சர் தடை விதித்தது தடை விதித்தது வரவேற்புக்குரியது அது போல பீஸ் கட்டவில்லை என்று காரணத்தை சொல்லி ஆசிரியர்களுக்கு பல தனியார் பள்ளிகள் சம்பளம் கொடுக்கப்படாமல் உள்ளனர் அப்படி பட்ட சம்பளம் கொடுக்க வக்கற்ற பள்ளிகளை பள்ளி நடத்த தடை செய்யவேண்டும். இவளவு வருடம் கோடிகளில் கொள்ளை அடித்தும் ஆசிரியர்களிற்கு சம்பளம் கொடுக்க வக்கற்ற நபர்கள் எதற்காக பள்ளி நடத்த வேண்டும்? அணைத்து ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் மூலம் சம்பளம் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தியதை பள்ளிகள் உறுதி செய்ய அரசு ஆணையிட வேண்டும். இது பள்ளிகள் மட்டுமின்றி அணைத்து நிறுவனங்களுக்கும் அரசு உத்திரவு இட வேண்டும். அவர்கள் தங்கள் ஊழியர்ககுக்கு ஆன்லைன் மூலம் சம்பளம் செலுத்தியதை உறுதி செய்யவேண்டும். கொரோன காலத்தில் பனி நீக்கம் செய்யபட்டவர்களுக்கு அந்நிறுவனம் அடுத்த 6 மாதம் சம்பளம் கொடுபதற்கு ஏற்பாடு செய்யபடவேண்டும்.
Rate this:
Cancel
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
28-மே-202012:04:28 IST Report Abuse
M.P.Madasamy மாற்றி மாற்றி பேசுவது இவருக்கு ஒன்றும் புதிதல்ல.ஆனால் பாதிக்கப்படுவது மாணவர்களும் பெற்றோர்களும்தான் என்பதை இவர் புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
28-மே-202011:40:10 IST Report Abuse
R. Vidya Sagar அரை வேக்காடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X