அமெரிக்காவில், 'கொரோனா' பலி ஒரு லட்சத்தை தாண்டியது

Added : மே 27, 2020
Share
Advertisement

வாஷிங்டன் : 'கொரோனா' வைரசால், உலகெங்கும், 3.52 லட்சம் பேர் உயிரிழக்க, அமெரிக்காவில் மட்டும், பலியானோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியது.

உலகெங்கும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 56 லட்சத்து, 99 ஆயிரத்து, 30 ஆக உயர்ந்துள்ளது. இதில், மூன்று லட்சத்து, 52 ஆயிரத்து, 494 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் மட்டும், பலியானோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 572 ஆக உயர்ந்துள்ளது. அங்கு, 17 லட்சத்து, 25 ஆயிரத்து, 275 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. ஒரு பக்கம், வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்தாலும், பெரும்பாலான நகரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்ப துவங்கியுள்ளன.மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நியூயார்க் நகரில், வால் ஸ்டிரீட் எனப்படும் பங்குச் சந்தை, மீண்டும் சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளது.

இரண்டு மாதங்களுக்குப் பின், பங்குச் சந்தை இயங்குவதால், நகர கவர்னர் ஆன்ட்ரூ கியூமோ, மணியடித்து துவக்கி வைத்தார்.லாஸ் வேகாஸ் நகரில், உலகப் புகழ்பெற்ற, 'காசினோ' எனப்படும் சூதாட்ட கிளப்புகள், ஜூன், 4 முதல், முழுமையாக இயங்கும் என, அறிவிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில், வாஷிங்டனில், அதிக அளவு மக்கள் கூடுவதற்கு தடை தொடர்கிறது. இதற்கிடையே, பல்வேறு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள், பரவலை வெகுவாக கட்டுப்படுத்தியுள்ளன. மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மேற்காசிய நாடான சைப்ரஸ், சுற்றுலாவுக்கு புகழ்பெற்றது. இங்கு, வரும், ஜூன், 9 முதல், சுற்றுலா பயணியர் வருகை தரலாம் என, அந்நாடு அறிவித்துள்ளது.

இதற்காக சிறப்பு சலுகையும் அறிவித்துள்ளது. சுற்றுலா வந்து யாருக்காவது வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அவருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், தங்கும் வசதி, உணவு, மருத்துவம் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து நாடுகளுக்கும், விமான நிறுவனங்களுக்கும் சைப்ரஸ் கடிதம் அனுப்பியுள்ளது. நியூசிலாந்தில், வைரசால் பாதிக்கப்பட்ட, 1,504 பேரில், 21 பேர் மட்டுமே உயிரிழந்தனர். மற்ற அனைவரும் குணம் அடைந்துவிட்டனர். இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான தடை தொடர்கிறது.மற்றொரு ஆசிய நாடான தென் கொரியாவில், கடந்த, 50 நாட்களில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில், 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X