பொது செய்தி

இந்தியா

தடையின்றி மருத்துவ சேவை

Added : மே 27, 2020
Share
Advertisement

புதுடில்லி : 'வைரசால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகள், இளம்பருவத்தினர் ஆகியோரது ஆரோக்கியத்திற்கான மருத்துவ சேவைகள், தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்' என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும், அத்தியாவசிய மருத்துவ சேவைகள், அனைவருக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். எந்தவொரு காரணத்திற்காகவும், இவை தடைபடக் கூடாது. வைரசால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகள், இளம்பருவத்தினர் ஆரோக்கியத்திற்கான மருத்துவ சேவைகள், சில கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும், 2.5 கோடி பெண்கள் கர்ப்பம் தரிக்கின்றனர். அவர்கள், குழந்தையை பெற்றெடுக்கும் வரை, அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சேவைகளும் கிடைக்க வேண்டும்.குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், முகக் கவசம் அணிந்து, கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகளுக்காக, கருவுறுதல் மையங்கள் அவசியமாகும். நாட்டில், அதிக எண்ணிக்கையில் உள்ள இளம்பருவத்தினருக்கு தேவையான மருத்துவ வசதிகளும் கிடைக்கவேண்டும். மருத்துவ உபகரணங்களை, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பிறகே, சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும்.

கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகள், இளம்பருவத்தினர் ஆகியோருக்கான மருத்துவ சேவைகளின்போது, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமல்ல. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பரிசோதனை வழிமுறைகளை மட்டும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X