பொது செய்தி

இந்தியா

ஊரடங்கால் பாதிப்பு குறைவு: மத்திய அரசு அறிவிப்பு

Updated : மே 29, 2020 | Added : மே 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஊரடங்கால் பாதிப்பு குறைவு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி : 'ஊரடங்கு உத்தரவு அமலால் பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. அதைவிட 'கொரோனா' வைரஸ் பரவல் வேகம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான வைரஸ் பாதிப்பு மற்றும் பலி குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இதுவரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 767 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 4,337 பேர்
உயிரிழந்துள்ளனர்.இந்த வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல நன்மைகள் அனுபவங்கள் கிடைத்துள்ளன. அதில் மிக முக்கியமானது வைரஸ் பரவல் வேகம் மிக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலை தடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் பரிசோதனை மையங்கள் அமைப்பது மருத்துவமனைகளில் வசதி ஏற்படுத்துவது ஆகியவற்றில் மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளோம். இதுவரை 32 லட்சத்து 42 ஆயிரத்து 160 பேருக்கு பரிசோதனை செய்யப்
பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.16 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி ஊரடங்கு உத்தரவால் பாதிப்பு மற்றும் பலி வெகுவாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டோரில் உயிரிழப்பு விகிதம் நம் நாட்டில் 2.86 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் உலக சராசரி 6.36 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
28-மே-202021:15:58 IST Report Abuse
RajanRajan சுற்றுசூழல் பெருமளவு சுத்தமடைந்து உலகம் சுத்தமாக உள்ளது. ஆனால் இங்குள்ள எதிரிக்கட்சிகளின் மனம் தான் சுத்தமடைய மறுக்கிறது குறிப்பாக பப்பு பப்பி & கோ வுக்கு சுடலைக்கனிகளுக்கும் தூக்கம் போய்விட்டது. ஒரே பினாத்தலும் புலம்பலும் தான் ஓயவே இல்லை.
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
28-மே-202014:21:43 IST Report Abuse
Sathyanarayanan Subramanian சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொண்டான் பாதிப்பு கட்டுபாட்டில் உள்ளது. சென்னை மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் இந்த நோயை குணப்படுத்த முடியும். மக்கள் ஒத்துழைப்பு அவசியம்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
28-மே-202010:07:31 IST Report Abuse
blocked user நிச்சயமாக குறைவுதான் இல்லை என்று சொல்லவில்லை. மத்திய அரசின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் அளவில் மாநிலங்களில் ஒத்துழைப்பு இல்லை. உதாரணத்துக்கு மஹாராஷ்டிரா - இன்றளவில் அங்கு கோமாளித்தனம்தான் நடக்கிறது. தமிழகம் கூட அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவே இல்லை. தப்லீக் கூட்டத்தினரை இராணுவத்தை வைத்தாவது தனிமைப்படுத்தி போதிய வைத்தியம் பார்த்து இருந்தால் சென்னை இந்த அளவுக்கு கேவலமாக போயிருக்காது. மிக எளிதாக கட்டுப்படுத்தி இருக்க முடியும். என்ன செய்வது... விதி என்று ஒன்று இருக்கிறதே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X