அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கொரோனா அதிகரிப்பது ஏன்? ; அமைச்சர் ஜெயகுமார் தகவல்

Added : மே 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
 சென்னையில் கொரோனா அதிகரிப்பது ஏன்? ;  அமைச்சர் ஜெயகுமார் தகவல்

சென்னை : ''சென்னையில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால், கொரோனா அதிகரித்து வருகிறது,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னை, ராயபுரம் மண்டலத்தில், 52 மற்றும் 54 முதல், 59 வரையிலான வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு, 30 ஆட்டோக்கள் வாயிலாக, கபசுர குடிநீர், மூலிகை தேநீர் வழங்கும் திட்டத்தை, பாரதி மகளிர் கல்லுாரியில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், வேப்பிலை கொத்து அசைத்து, நேற்று துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:சென்னையில், கொரோனா வைரஸ் அதிகமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில், முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தி, அறிவுரைகள் வழங்கி வருகிறார்.

சென்னையில் மண்டல வாரியாக, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரையில், 1 சதுர கிலோ மீட்டரில், 5,500 - 6,000 பேர் வரை வசிக்கின்றனர். ஆனால், கிராமங்களில், 1 சதுர கிலோ மீட்டரில், 600 பேர் மட்டுமே வசிக்கின்றனர். சென்னையில் மக்கள் அடர்த்தி காரணமாக, கொரோனா அதிகரித்து வருகிறது. மேலும், கட்டுப்படுத்துவதும் சவாலானதாக உள்ளது.சென்னை குடிசை பகுதிகளில், இதுவரை, 16 லட்சம் மறு பயன்பாட்டுடன் கூடிய முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ராயபுரம் மண்டலம், எழும்பூர், துறைமுகம், ராயபுரம் ஆகிய, மூன்று சட்டசபை தொகுதிகள் உடையது. இந்த மண்டலத்தில், கொரோனா பாதிப்பு, 2,000ஐ நெருங்குகிறது. போலியோ, சிக்குன் குனியா, டெங்கு, அம்மை போன்ற பல்வேறு நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டது போல், கொரோனாவும் கட்டுப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:சென்னையில், 24 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. மற்ற, 36 மாவட்டங்களோடு சென்னையை ஒப்பிட முடியாது.

சென்னையில் மட்டும், ஒரு கோடி பேர் வசிக்கின்றனர். இதில், மத்திய மண்டலங்களில் மட்டுமே பாதிப்பு உள்ளது. திருவொற்றியூர், மணலி போன்ற மண்டலங்களிலும், தெற்கு மண்டலங்களிலும் பாதிப்பு குறைவு. தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட மத்திய மண்டலங்களில் பாதிப்பு உள்ளது.சென்னையில், போதிய அளவில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மேலும், அடர்த்தி மிகுந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

மேலும், அவர்களின் வசிப்பிடங்கள் கிருமி நாசினி வாயிலாக சுத்தப்படுத்தப் படுகின்றன. அதேபோல, சளி, காய்ச்சல் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.சமூக வலைதளங்களில், கபசுர குடிநீர், கொரோனாவிற்கு எதிராக செயல்படுவதற்கான ஆராய்ச்சிகள் இல்லை என, சிலர் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரைப்படி, நோய் எதிர்ப்பு சக்தியாக வழங்கப்படுகிறது; 99 சதவீதம் நல்ல பலனை அளித்துள்ளது.கொரோனா பாதித்தவரை கண்டுபிடிப்பதற்குள், அவரது குடும்பத்தைச் சேர்ந்த, 10 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இது போன்றவற்றால், சென்னையில் தினமும், 500 அளவில் கொரோனா பதிவாகி வருகிறது. மாநகராட்சியில், கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிப்பதற்கு, மூன்று பிரத்யேக மருத்துவ மனைகள் உள்ளன; முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளை கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது.சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், 15 சதவீதம் பேர், முக கவசம் அணிதல், கை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிப்பதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அளித்த பேட்டி:சென்னையில், 28 நாட்கள் தொற்று ஏற்படாத, 64 தெருக்கள், நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன. இதுவரை, 795 தெருக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது, 356 தெருக்கள் மட்டுமே, கட்டுப்பாட்டு தெருக்களாக உள்ளன. விடுவிக்கப்பட்ட தெருக்கள், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.நகராட்சி நிர்வாகத்தில் இருந்து, 45 சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி சார்பில், 55 சுகாதார ஆய்வாளர்களை பணியமர்த்தி உள்ளோம்.

மேலும், பொது சுகாதாரத் துறையில், 200 சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சியில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்; அனைவரும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சியில் உள்ளவர்களில், 55 வயதுக்கு மேற்பட்ட சுகாதார பணியாளர்களை பணிக்கு வர வேண்டாம் என, அறிவுறுத்தி உள்ளோம்; அவர்களுக்கான சம்பளம் வழக்கம் போல வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யார்மனிதன் - Toronto,கனடா
28-மே-202021:34:02 IST Report Abuse
யார்மனிதன் மெயின் ரோட்டுக்கு வாம்மா பாத்துக்கலாம்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
28-மே-202021:19:57 IST Report Abuse
Tamilan இது ஒரு காரணமா ? இதெற்கெல்லாம் என்ன காரணம் ?. இந்தியத்துவதை மறந்து மதவாத நாடுகளிடம் மண்டியிட்டுக்கிடப்பதால் ஏற்பட்டதன் விளைவுதான் இப்படி நெருக்கமானதற்கும் காரணம் . சுருக்கமாக சொன்னால், அனைத்தும், அரைகுறைகள் , தான் தோன்றிகள், மெத்த படித்த மேதாவிகளால் வந்ததன் விளைவு என்பதை ஏற்காதவரை, இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் .
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
28-மே-202017:59:16 IST Report Abuse
Srinivas தமிழகத்தில் கொரோனா இல்லை என்று சொன்னவர்கள் இப்போது சென்னையை மற்ற இடங்களுடன் ஒப்பிட்டு அரசுக்கும், கொரோனா பரவுவதற்கும் அரசு காரணமில்லை என்ற ரீதியில் அறிக்கை விடுகின்றனர். இதுதான் இந்த அரசின் லட்சணம். இனிமேல் படிப்படியாக கொரோனா தொற்று அதிகமாகி இந்தியாவில் தமிழகம்தான் முதலில் உள்ளது என்ற ''மிக நல்ல பெயரும்'' மத்திய அரசால் அறிவிக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X