பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்

Added : மே 27, 2020
Share
Advertisement

தனிமைப்படுத்தப்பட்ட குதிரை ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், சோபியான் உட்பட, 10 மாவட்டங்களில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதால், அவை, சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரஜவுரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள், பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், சோபியானிலிருந்து, ரஜவுரிக்கு, ஒருவர் குதிரையில் வந்தார். அவர், சிவப்பு மண்டலத்தில் இருந்து வந்ததால், தனிமைப்படுத்தப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவு வரும் வரையில், குதிரையையும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசுக்கு சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்'புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில், சிவகுமார் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'குறிப்பிட்ட காலத்துக்குள், கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க, எந்த வழிகாட்டுதல்களும் இல்லை என்பதால், அதற்கு கால அளவு நிர்ணயிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியிருந்தார்.இந்த மனு மீதான விசாரணை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கருணை மனுக்கள் மீது, ஜனாதிபதி முடிவெடுக்க, கால அளவு உள்ளதா என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக விளக்கம் கேட்டு, அந்த அமைச்சகத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது' என, கூறினர்.30,000 திருமணங்கள் ரத்துஆமதாபாத்: கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில், அதிகபட்சமாக, 30 பேரும், இறுதிச் சடங்குகளில், 20 பேரும் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுதும், இரண்டு மாதங்களாக, பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தில் மட்டும், 30 ஆயிரம் திருமணங்கள் ரத்து செய்யப்படுள்ளன. இங்கே, வழக்கமாக, ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தான், அதிகளவில் திருமணங்கள் நடக்கும், பாக்., எதிர்ப்பை மீறி வேலை ஜம்மு: ஜம்முவில், சர்வதேச எல்லையை ஒட்டி, ரன்பீர் கால்வாய் அமைந்துள்ளது. இது, ஜம்மு விவசாயிகளுக்கு, முக்கிய பாசன கால்வாயாக உள்ளது. இந்த கால்வாயை துார்வார, இந்தியா முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தி, பாகிஸ்தான், 'பூச்சாண்டி' காட்டியது. எனினும், இந்த பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு, 59.55 கி.மீட்டர் நீளமுள்ள கால்வாயை, துார்வாரி முடித்துள்ளனர்.

தமிழகம் கிளம்பிய தொழிலாளர்கள் மும்பை: மஹாராஷ்டிராவில், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கால், இவர்கள் வேலையின்றி பரிதவித்து வந்தனர்.இந்நிலையில், ரயில்வே சார்பில் இயக்கப்படும், தொழிலாளர் சிறப்பு ரயிலில், தமிழகம் திரும்ப, இவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, மும்பையிலிருந்து, திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட ரயிலில், 1,600க்கும் அதிகமான தமிழக தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.

விமானங்களில், 62,641 பேர் பயணம் புதுடில்லி: ஊரடங்கால், கடந்த, இரண்டு மாதங்களாக, உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் முடக்கப்பட்டன. 25ம் தேதி முதல், உள்நாட்டு விமான சேவைகளை துவக்க, மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து, 428 விமானங்கள் இயக்கப்பட்டன. நேற்று முன்தினம், 445 விமானங்கள் இயக்கப்பட்டதில், 62 ஆயிரத்து, 641 பேர் பயணம் செய்ததாக, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X