அதிபர் டிரம்பின் தவறான அறிக்கைகள் ; முதல் முறையாக எச்சரித்த, 'டுவிட்டர்'

Added : மே 28, 2020
Share
Advertisement

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கைகள் தவறானவை என, டுவிட்டர் நிர்வாகம் முதல் முறையாக எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தேர்தலை, 'இ - மெயில்' மூலம் நடத்த ஜனநாயக கட்சி வலியுறுத்தி வருகிறது.ஆனால், இந்த நடைமுறையால் மோசடி நடக்கும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்று முன்தினம், டுவிட்டரில் இரண்டு பதிவுகளை வெளியிட்டார். அதில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது:இ - மெயில் மூலம் ஓட்டளிக்கும் நடைமுறை, தேர்தலில் மோசடி நடக்க வழிவகுக்கும். இ - மெயிலுக்கு வந்து சேரும் ஓட்டுகள் கொள்ளையடிக்கப்படும்;

அதன்மூலம், போலியான ஓட்டுச்சீட்டுகள், 'பிரின்ட்' செய்யப்பட்டு, மோசடிகள் அரங்கேறும். கலிபோர்னியா மாகாண கவர்னர், லட்சக்கணக்கான மக்களுக்கு ஓட்டுச் சீட்டுகளை அனுப்பி வருகிறார்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 'இ -மெயில் மூலம் மோசடிகள் நடக்கும் என அதிபர் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை தவறானது' என, டுவிட்டர் நிர்வாகம் கூறியுள்ளது. டிரம்பின் இந்த இரண்டு டுவிட்டுகளின் கீழும், நீல நிற ஆச்சரிய குறியுடன், 'இமெயில் மூலம் ஓட்டளிக்கும் முறை குறித்த, உண்மை தகவல்களை பெறுங்கள்' என, மக்களுக்கு அறிவுறுத்தும் விதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதிபர் டிரம்பின் அறிக்கையை, டுவிட்டர் நிர்வாகம் எச்சரித்துள்ளது, இதுவே முதன் முறையாகும். இதையடுத்து, ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப், டுவிட்டர் நிர்வாகத்தை சாடி, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த ஆண்டு அதிபர் தேர்தலில், டுவிட்டர் தலையிட துவங்கியுள்ளது. பெரும் ஊழல் மற்றும் மோசடிக்கு வழிவகுக்கும் இ - மெயில் ஓட்டுச்ச்சீட்டுகள் தொடர்பாக, நான் வெளியிட்ட அறிக்கை தவறானவை என, அது கூறுகிறது. சி.என்.என்., மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போலி செய்தி நிறுவனங்களின் தகவல்களை வைத்து, இவர்கள் இப்படி கூறுகின்றனர். டுவிட்டர், பேச்சுரிமையை கட்டுப்படுத்துகிறது. அதிபராக இருக்கும் நான், அதை அனுமதிக்க மாட்டேன்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X