சீன தேசிய கீதம் சட்டம் ஹாங்காங்கில் போராட்டம்

Added : மே 28, 2020
Share
Advertisement

ஹாங்காங் : சீன தேசிய கீதத்தை அவமதிப்பதை குற்றமாக்கும் வகையில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் சட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்ட் வளாகம் முன், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங், 1997ல் சீனாவிடம் ஒப்படைக்கப் பட்டது. ஒரு நாடு, இரண்டு நிர்வாகம் என்ற அடிப்படையில், ஹாங்காங்கில் தனி நிர்வாகம் செயல்பட, அப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அதை மீறி, ஹாங்காங்கை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.கடந்த ஆண்டு, குற்றவாளிகளை நாடு கடத்தும் வகையில், புதிய சட்ட மசோதா, ஹாங்காங் பார்லி.,யில் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து, நாடு முழுதும், பல மாதங்களுக்கு போராட்டங்கள் வெடித்தன.அதனால், அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது.

கொரோனா மற்றும் ஊரடங்கால், போராட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், ஹாங்காங்கில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில், சீனா இறங்கியுள்ளது. இதைத் தவிர, சீன தேசிய கீதத்தை அவமதிப்பதை குற்றமாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2014ல் இருந்தே, ஹாங்காங்கில், தன்னாட்சி கேட்டு, சீனாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த, 2015ல் நடந்த சர்வதேச கால்பந்து போட்டியின்போது, சீன தேசிய கீதம் இசைக்கப்பட்டதை எதிர்த்து, அதை அவமதிக்கும் வகையில் சம்பவங்கள் நடந்தன.

இதையடுத்தே, இந்த புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு, சீனா தீவிரமாக உள்ளது. இந்த சட்டத்தின்படி, சீன தேசிய கீதத்தை அவமதித்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறை மற்றும் 4.88 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.சீனாவுக்கு எதிராகப் போராடுபவர்களை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதையடுத்து, ஹாங்காங்கில் மீண்டும் போராட்டங்கள் துவங்கியுள்ளன. இந்நிலையில், இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, ஹாங்காங் பார்லி.,யில் நேற்று விவாதம் நடத்த திட்டமிடப்பட்டது. அதையடுத்து, பார்லி.,யை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

பார்லி., வளாகம் முன், ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்த நிலையில், ஹாங்காங் போலீசார், மிளகு துாள் குண்டுகளை வீசி, கூட்டத்தை கலைத்தனர். இதனால், ஹாங்காங் நகரில் பதற்றம் நிலவுகிறது.சீனாவின் இந்த முயற்சிகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். 'சீனாவின் முயற்சிகளுக்கு, அதிபர் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். 'தற்போது உலகின் மிகப் பெரிய பொருளாதார நகரமாக உள்ள ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால், அதன் தன்மையை இழந்து விடும் என, அவர் கூறிஉள்ளார்' என, அதிபரின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X