விமானத்தில் வைரஸ் பரவ வாய்ப்பில்லை

Added : மே 28, 2020
Share
Advertisement

வாஷிங்டன்: 'விமானங்களில், வைரஸ் அல்லது இதர நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. ஏனெனில், விமானத்திற்குள், வடிகட்டிய நிலையில் தான் காற்று சுழல்கிறது. அதேசமயம், விமானத்தில், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சிரமம் என்பதால், கொரோனா தாக்குதலுக்கான வாய்ப்பும் உள்ளதை மறுப்பதற்கில்லை' என, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

விமான பயணங்களில், இரு இருக்கைகளுக்கு நடுவே, ஒரு இருக்கையை காலியாக விட வேண்டும் என, இம்மையம் வெளியிட்டு உள்ள பயண விதிமுறைகளில் வலியுறுத்தப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லத்தீன் அமெரிக்காவில் கொரோனா ஊழல்மியாமி: அர்ஜென்டினா முதல் பனாமா வரையிலான லத்தீன் அமெரிக்க நாடுகளில், கொரோனா ஊழல் தலைதுாக்கியுள்ளது.கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ முகாம்கள் அமைக்க ஒதுக்கிய நிதியில், பல கோடி டாலரை தனக்கு ஒதுக்கிக் கொண்ட புகாரில், பிரேசிலின், ரியோ டீ ஜெனீரோ நகர மேயர் வீட்டில், போலீசார் அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியுள்ளனர்.

கொலம்பியாவில், லஞ்சம் வாங்கி, குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கிய, 32 கவர்னர்களிடம் விசாரணை நடக்கிறது. அர்ஜென்டினாவில், அரசியல்வாதிகளின் ஆதரவில், காலாவதியான 15 ஆயிரம், 'என்95' முக கவசங்களை, 10 மடங்கு கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்த புகார் தொடர்பான புலனாய்வு துவங்கியுள்ளது. பொலிவியாவில், அதிக விலைக்கு, 'வென்டிலேட்டர்' சாதனங்களை வாங்கிய, சுகாதார துறை அமைச்சர், கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்ற குற்றச்சாட்டில், பனாமா அதிபரின் மூத்த உதவியாளர் பதவியிழந்துள்ளார்.

ஈரான் பார்லிமென்ட் கூட்டம் துவங்கியது டெக்ரான்: மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஈரானில், பிப்ரவரியில், பார்லி., தேர்தல் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக, புதிய எம்.பி.,க்கள் பதவியேற்பு தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில், ஈரான் பார்லி.,யின் முதல் கூட்டத் தொடர், அதிபர், ஹசன் ரஹானி உரையுடன் நேற்று துவங்கியது. அனைத்து எம்.பி.,க்களும் முக கவசம் அணிந்து வந்தனர். வெப்ப மானி சோதனைக்குப் பின், அவர்கள் பார்லி.,க்குள் அனுமதிக்கப் பட்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடித்து, புதிய உறுப்பினர்கள், பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X