எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்: துல்லியமாக அளவீடு செய்யும் சீன குழு

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

பீஜிங்: எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மறு மதிப்பீடு செய்வதற்காக, சீன, 'சர்வே' குழுவினர், நேற்று அங்கு சென்றடைந்தனர்.



latest tamil news



அண்டை நாடான சீனா, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை, இதுவரை ஆறு முறை அளவிட்டு, இருமுறை உயரத்தையும் வெளியிட்டது.அவர்கள் கணக்கீட்டின்படி, எவரெஸ்ட் சிகரம், 1975ல், 8,848.13 மீட்டராகவும், 2005ல், 8,844.43 மீட்டராகவும் இருந்தது. அந்நாடு இறுதியாக கணக்கிட்ட உயர அளவு, நேபாள நாடு எடுத்திருந்த அளவைவிட, 4 மீட்டர் குறைவாக இருந்தது. இதனால், சிகரத்தின் உயரத்தை மீண்டும் துல்லியமாக அளவீடு செய்ய, சீனாவின் சர்வே குழுவினர், மே, 1ல் முடிவு செய்தனர்.


latest tamil news



இதையடுத்து, அக்குழுவினர், திபெத் வழியாக புறப்பட்டு சென்று, நேற்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். 'எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவீடு செய்வது, இயற்கையை பற்றிய மனித அறிவை மேம்படுத்துவதோடு, விஞ்ஞான வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என, விஞ்ஞானிகள் நம்புகின்றனர்' என, அந்நாட்டு அரசின், 'சின்ஹுவா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Citizen_India - Woodlands,இந்தியா
28-மே-202009:35:25 IST Report Abuse
Citizen_India எவரெஸ்ட் சிகரத்தை அளக்கிறார்களா அல்லது இந்தியாவை நோட்டம் விடுகிறார்களா?
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா அதுக்குள்ள விற்பனை செய்யப்பட்டு விட்டதா? இந்தியா ஒன்னும் செய்யாததுக்கே ஊரை கூட்டி ஊளையிட்ட நேபாாள் இதற்க்கு என்ன செய்ய போகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X