பொது செய்தி

இந்தியா

வெட்டுக்கிளிகளை அழிக்க, 'ட்ரோன்' மூலம் பூச்சிக்கொல்லி

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை அழிக்க, 'ட்ரோன்' உதவியுடன், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.latest tamil newsராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, ஜெய்ப்பூர் மாவட்டத்தில், வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. பயிர்கள் நாசமடைவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், 'ட்ரோன்' உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, வெட்டுக்கிளிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டு, ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சோமு அருகே சமோத் பகுதிகளில், பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து, வேளாண்துறை ஆணையர் ஓம் பிரகாஷ் கூறியதாவது:வெட்டுக்கிளிகளை அழிக்க, வாடகை ட்ரோனை பயன்படுத்தும் நிலையில், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்போம். வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகள், கரடு முரடான பாதைகள் மற்றும் உயரமான பகுதிகளில், ட்ரோன்கள் பலனளிக்கும்.ஒரு ட்ரோன், 15 நிமிடத்தில், கிட்டத்தட்ட, 2.5 ஏக்கர் பரப்பளவில் பூச்சிக்கொல்லியை தெளித்துவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ராஜஸ்தானில் இருந்து, ம.பி., மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு வரவிருக்கும் வெட்டுக்கிளிகள், ஓரிரு நாட்களில், சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் வர வாய்ப்புள்ளது. இதனால், இம்மாநிலங்களின் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news
தமிழக - கேரள எல்லையில் வெட்டுக்கிளி படையெடுப்பு


நீலகிரியை ஒட்டியுள்ள கேரளப் பகுதியிலும் வெட்டுக்கிளி கூட்டம், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வாழை, மா, இஞ்சி இலைகளை, வெட்டுக்கிளிகள் உட்கொள்வதால், சில நிமிடங்களில், அவை வெறும் தண்டுகளாக மாறி விடும் அளவுக்கு, இவற்றின் தாக்கம் அதிகரித்துஉள்ளது. இவற்றை முழுமையாக கட்டுப்படுத்தாவிட்டால், தமிழக எல்லையோர விவசாய கிராமங்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
28-மே-202012:38:33 IST Report Abuse
Krishna Only Drone Possible Must Be Done On Large Scale
Rate this:
Cancel
28-மே-202012:31:32 IST Report Abuse
வெற்றி கொண்டான்  ::  தமிழன் செல்போன் டவர் அமைத்து பறவைகளை ஒளித்து விட்டு இன்று வெட்டுக்கிளிகளுடன் போராட்டம் பறவை இருந்தால் அவைகளுக்கு உணவு வெட்டுக்கிளி , அது அழிந்து இருக்கும்
Rate this:
Cancel
28-மே-202012:00:14 IST Report Abuse
ஆப்பு பூச்சி மருந்து தெளிக்காமல் பிடித்தால் இவற்றை மனிதர்களும், விலங்குகளும் உண்ணலாம். இப்போ மருந்து தெளிப்பதால் இவற்றை சாப்பிட முடியாது. ஆர்கானோபாஸ்பேட்டுகள் உடலில் சென்றால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். 130 கோடி பேர் வேலை வெட்டியில்லாமத்தானே இருக்காங்க. ஆளுக்கு ஒரு வலையைக் குடுத்து 10000 வெட்டுக்கிளி புடிச்சா 100 ரூவாய்னு கூலி குடுக்கலாம். நம்ம அர் அறிவு ஜீவிங்களுக்கு இது தெரியாது. ட்ரோன் மூலம் கெமிக்கல் தெளிப்பாய்ங்க. ஊரைக் கெடுப்பாய்ங்க.
Rate this:
sri - trichy,இந்தியா
28-மே-202016:32:54 IST Report Abuse
srican we eat this....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X