ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் மரணம்

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Telangana, Borewell, death,
ஆழ்துளை கிணறு, தெலுங்கானா, சிறுவன்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.


latest tamil news


தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில், கோவர்தன் என்பவரின் 3 வயது மகன் ஷாய் வர்தன். தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் நேற்று விவசாய நிலத்தில் நடந்து சென்ற போது, தவறுதலாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான். முதலில் 25 அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, மண் சரிவு ஏற்பட்டதால், குழந்தை கீழிறங்கியது.

இதனையடுத்து குழந்தையை மீட்கும் பணிகள் நடந்தன. ஐதராபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தது. குழந்தை சுவாசிக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியும் நடந்தது. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
28-மே-202016:51:42 IST Report Abuse
Mani iyer Vijayakumar இவன் தமிழ் நாட்டில் இருந்தால் இதன் முலம் இவனது தாய் தந்தைக்கு 20+20 _40 லட்சம் கிடைத்திருக்கும்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
28-மே-202016:43:11 IST Report Abuse
வெகுளி இப்போது பொங்குவோம்... அடுத்த ஆழ்குழாய் மரணம் வரை அமைதியாய் இருந்து மீண்டும் பொங்குவோம்... அவலங்கள் தொடர்கதை...
Rate this:
Cancel
Susil Kumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-மே-202015:37:07 IST Report Abuse
Susil Kumar திருந்தவே மாட்டீங்களா ? , எத்தனை உயிர் வேண்டும் உங்கள் மரமண்டைக்கு ? முதலில் ஆழ்துளை கிணறு மூடாத தவறு , பிறகு ஆழ்துளை கிணறு இருக்கும் இடம் என்று தெரிந்தும் சிறு குழந்தையை கவனக்குறைவாக அவ்விடத்தின் அருகே நடத்த விட்டது யார் குற்றம் ? சிறிது பொறுங்கள் அரசு வேலையும் முப்பது லட்சமும் கிடைக்கும் - இதை மிகவும் கனத்த இதயத்துடன் எழுதுகிறேன் , மூடி வைக்க என்ன விலை ஆகும் , அதை பண்ணாமல் சின்னஞ்சிறு குழந்தைகளின் உயிர் மீது விளையாடுகிறீர்கள் , இனி கவன குறைவாக இருக்கும் பெற்றோர்களுக்கும் தண்டனை குடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X