கொரோனாவை நீங்களே கையாளலாம்: அமித்ஷாவிற்கு மம்தா பதில்

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
Amit Shah, Mamata Banerjee, Covid-19 handling, Coronavirus, Corona, Covid-19, west bengal, மம்தா, மம்தாபானர்ஜி, அமித்ஷா, உள்துறைஅமைச்சர்அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்குவங்க முதல்வர் மம்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, பிரதமர்மோடி, புயல்பாதிப்பு, கொரோனாபாதிப்பு, மாநில அரசு, மத்திய அரசு, மோதல், இயற்கை சீற்றம், மத்திய குழு, புலம்பெயர் தொழிலாளர், ரயில், அரசியல்,

கோல்கட்டா: கொரோனா விவகாரத்தை மே.வங்க அரசு சரியாக கையாளவில்லை என நினைத்தால், நீங்களே கையாண்டு கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்தேன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்வர் மம்தா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் தவறுகள் குறித்து மே.வங்க அரசுக்கு அமித்ஷா கடிதம் எழுதினார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி : அமித்ஷா எழுதிய கடிதத்திற்கு பதிலளித்து, மே.வங்கத்திற்கு தொடர்ச்சியாக மத்திய குழுவினரை அனுப்பி வருகிறீர்கள் என அமித்ஷாவிடம் கூறினேன். மாநில அரசு தனது கடமையை சரியாக கையாளவில்லை என நீங்கள் நினைத்தால், கொரோனா விவகாரத்தை நீங்களே ஏன் கையாளக்கூடாது? அதில் எனக்கு பிரச்னையில்லை என தெரிவித்தேன். அதற்கு அமித்ஷா, இல்லை, இல்லை,. மக்களால் தேர்வு செய்த அரசை நாங்கள் ஒதுக்கி வைக்க முடியாது என தெரிவித்தார். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மத்திய அரசு தான் ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனால், விமானங்கள், ரயில்கள் இயங்குகின்றன. ஆனால், மக்களின்நிலை என்ன?


latest tamil news


பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். கொரோனா பரவவில்லை என்பதை பார்க்க வேண்டும். இந்தியாவில் ஏற்கனவே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். அதில், கால்வாசி, அரசியல்காரணமாக பரப்பப்பட்டது. பீஹார் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானும், ம.பி.,யும் கொரோனாவை பரப்பி வருகின்றன. அதில் நான் என்ன செய்ய முடியும். இந்த மோசமான நேரத்தில், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்.

எனக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காக , அரசியல் சூழ்ச்சியுடன் மாநிலத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களுடன் ரயில் திடீரென வருகிறது. 2021 சட்டசபை தேர்தலில் காரணமாக, பிரச்னை ஏற்படுத்துகின்றனர். எனக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், மாநிலத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனக்கு இடையூறு செய்தாலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயிலை திட்டமிட்டு இயக்குங்கள்.

ஒரு புறம் கொரோனாவையும், மறுபுரம் புயல்பாதிப்பையும் எதிர்கொள்ளும் நேரத்தில், திடீரென ரயில்கள் வருகின்றன. ரயிலை அனுப்புவதற்கு முன்னர் மாநில அரசுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டாமா? மாநில அரசுடன் ஏன் ஆலோசனைநடத்தவில்லை. எங்களின் திட்டமிடலை அவர்கள் பின்பற்றவில்லை. அரசியல் ரீதியாக தங்களுக்கு வசதியானவற்றை, கட்டாயப்படுத்தி செல்கின்றனர். இது போன்ற செயல்கள் மாநிலத்தை பாதிப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இயற்கை பேரழிவு மத்தியில் நாங்கள் இருக்கிறோம். நான் அதனை சரிசெய்வேனா? மக்கள் அவதிப்படும் பிரச்னையை கவனிப்பேனா அல்லது என் மீது சுமத்தப்பட்டுள்ள அரசியலை கவனிப்பேனா? இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-மே-202011:02:19 IST Report Abuse
skv srinivasankrishnaveni உனக்கு இடையூறு நீ எத்தாண்டீம்மா நீ எப்படி செயிச்சு சி எம் அன்னீங்க என்றும் தெரியும் தமிழ்நாடநாசமாப்போனதுக்குகாரணம் என்னான்னு தெரியும் உங்களமாநிலத்துலே நீ ஜெயிச்சதுக்கு காரணம் நீ எவனையோநம்பி வோட்டுப்போடவாச்சே தமிழன் பொய்களே பேசின முக அண்ணாதுரை ஜெயலலிதா சசிகலாவை நம்பி மோசம்போனாக ஒன்னாரெண்டா சகலமும் ஊழல்களேதான் பிரதானம் பிராடுபண்ணா தான் பஞ்சம்பிழைக்கமுடியும் தமிழ்நாட்டுக்கே தெரியும் பெங்காலியா வே இறுக்கப்படாது நீ ஜெயிக்கறதுக்கு தமிழ்நாடு நன்னாயிருக்கணும்னா இந்த ரெண்டுகூமுட்டைகளும் ஒழிஞ்சுபோகணும் கக்கூசுபோகவே கூட லஞ்சம் என்று இருக்கு கொரோனா இல்லீங்க கேன்சர் வந்தாலும்கூட நோ யூஸ் வெட்கம் மானம் சூடு சொரணை ரோசம் எதுவுமேயில்லாத ஈனம்களேதான் தமிழனுக்கா என்று மனதிலே எழுதிட்டானுக திராவிஷக்கிருமிகள் என்ற கழக தானுக
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
30-மே-202003:03:49 IST Report Abuse
kumzi இவர் கள்ளக்குடியேறி நச்சு பாம்புகளுக்கு பால் வார்ப்பவர்
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
28-மே-202020:00:57 IST Report Abuse
Viswam எல்லாத்தையும் நீயே எடுத்துக்கோ என்று சிறுபிள்ளைத்தனமான பேச்சு இந்த ஜன்மத்துக்கு திருந்தமாட்டாங்க மம்தா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X