தெலுங்கானாவில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 107 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் தெலுங்கானாவில் பரவலாக அதிகரித்து வருகிறது. மாநில அரசு நோய் பரவுவதை குறைக்க பல்வேறு கட்டங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் கொரோனா பாதிப்பு 2000 ஐ தாண்டியது.
இது தொடர்பாக சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், தெலுங்கானாவில் மேலும் நேற்று ஒரே நாளில் நோய் பாதிப்புகளால் 107 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,098 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் நோய் தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6 பேர் பலியாகினர். இதையொட்டி, பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆக உள்ளது.


latest tamil news



தெலுங்கானாவில் இதுவரை பதிவான பாதிப்புகளில் நேற்று ஒருநாளில் சராசரியாக பாதிப்பு அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 68 பேர் சவுதியில் இருந்து வந்தவர்கள் எனவும் மற்ற 39 பேர் வெளி மாநில தொழிலாளர்கள் எனவும் உறுதியானது. கடந்த 24 மணிநேரத்தில் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1321 பேர் நோய் பாதிப்புகளில் இருந்து குணமடைந்து திரும்பினர். தற்போது 714 பேர் சிகிச்சைக்காக காந்தி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களின் பிற பகுதிகளில் இருந்தும் பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள் என 297 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில் 173 பேர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் மற்றும் 94 பேர் சவுதியில் இருந்தும் வந்தவர்கள். இது தவிர சிறப்பு விமானம் மூலம் 30 பேர் வந்துள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் மீண்டும் மாநிலத்திற்குத் திரும்புகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X