உத்திரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் 7 பேர் பலி

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020
Share
Advertisement

லக்னோ : உ.பி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மேலும் 7 பேர் பலியானதாக மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. உத்திரபிரதேசத்திலும் நோய் பாதிப்புகளை குறைக்க அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நோய் தொற்றுக்கு மேலும் 7 பேர் பலியாகினர். புதிதாக 80 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 7,071 ஆக உயர்த்தியுள்ளது. 7 பேர் பலியானதையொட்டி, மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 189 ஐ எட்டியுள்ளது.

புதிதாக பலியானவர்களில் 5 பேர் ஆக்ராவையும், ஜலாவுன் மற்றும் குஷிநகரில் தலா ஒருவர் அடங்குவர். நோய் தொற்றில் இருந்து இதுவரை 4,062 பேர் சிகிச்சையில் குணமடைந்தும், 2,820 பேர் நோய் தொற்றால் சிகிச்சையிலும் உள்ளனர். மாநிலத்தில் நேற்று வரை 182 பேர் பலியானதாக உறுதிசெய்யப்பட்டது. அதில் 33 பேர் ஆக்ராவிலும், 23 பேர் மீரட்டிலும், 15 பேர் அலிகரிலும் , கான்பூர் மற்றும் மொரதாபாத்தில் தலா 11 பேர், பிரசாபாத்தில் 9 பேர், சான்ட் கபீர் நகரில் 6 பேர், கெளதம் புத்தா நகர் மற்றும் கோரக்பூரில் தலா 5 பேர், ஜான்சி, மதுரா மற்றும் வாரணாசியில் தலா 4 பேர் அடங்குவர்.


latest tamil news



இது தவிர, காசியாபாத், பஸ்தி, பிரயாகராஜ், பிரதாப்கர், எட்டா மற்றும் அயோத்தி ஆகிய நகரங்களில் இருந்து தலா மூன்று பேரண, ஜான்பூர், லக்னோ, புலந்த்ஷாஹர், பிஜ்னோர், அசாம்கர், பரேலி, அம்பேத்கர் நகர், சித்ரகூட், மெயின்பூரி ஆகிய நகரங்களில் இருந்து தலா இரண்டு பேர் என பலியானதாக கூறப்படுகிறது. இவை தவிர, பராபங்கி, ஹப்பூர், சித்தார்த் நகர்,ரெய்பரேலி, அம்ரோஹா, முசாபர்நகர், எட்டாவா, மஹ்ராஜ்கஞ்ச், ஷ்ரவஸ்தி, உன்னாவ், கான்பூர் தேஹாத், குஷினகர், மஹோபா மற்றும் லலித்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தலா ஒருவர் பலியானதாக பதிவாகியுள்ளது. மேலும் 7,923 பேரின் பரிசோதனைகள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X