வெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை பதிவிடுங்கள் வாசகர்களே...| Protest against Godman Webseries for portraying brahmins in bad light | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை பதிவிடுங்கள் வாசகர்களே...

Updated : மே 28, 2020 | Added : மே 28, 2020 | கருத்துகள் (64)
Share

இந்துக்களை அவமதிக்கும் வகையிலும், பிரமாண சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையிலும், ஆபாச காட்சிகள் நிறைந்து எடுக்கப்பட்டுள்ள உள்ள 'காட்மேன்' வெப்சீரிஸ் டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வெப்சீரிஸை தடை செய்ய வேண்டியும் இணையதளத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.latest tamil newsடிவி நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் 'காட்மேன்' என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.
இந்த சீரிஸின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் இந்து மதத்தை அவமதிக்கும் விதமான காட்சிகளும், பிராமணர் சமூகத்தை இழிவுப்படுத்தும் வசனங்களும், உச்சக்கட்ட ஆபாச காட்சிகளும் இடம் பெற்றுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக இந்து மதம் தொடர்பாக இழிவு பேசுவதையும், இந்து மத கடவுள்களை அவமதிக்கும் விதமான காட்சிகளையும் சினிமாக்களில் அதிகம் பார்க்க முடிந்தது. இப்போது வெப்சீரிஸ்களிலும் இதை புகுத்த தொடங்கி விட்டனர். சினிமா படங்களுக்கு தணிக்கை உள்ளது போன்று வெப்சீரிஸிற்கும் தணிக்கை வேண்டும் என குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டன.
அதேப்போன்று இந்து மதத்தை அவமதித்து இதுபோன்று காட்சிகளை வைப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. காட்மேன் வெப்சீரிஸிற்கு எதிராக இந்து கொள்கையை பின்பற்றுபவர்களும், ஆன்மிக பெரியவர்களும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.


latest tamil newsஇந்நிலையில் பிராமண சமூகத்தை இழிவுப்படுத்திய காட்மேன் படக்குழு மற்றும் ஜீ5 தளத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிவக்குமார் சர்மா என்பவர், Change.org என்ற இணையதளத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் புகார் தெரிவிக்க ஆதரவு திரட்டி வருகிறார். அதில் ''நம் சமூகத்தையும், வேதத்தையும் மிகவும் கேவலமான முறையில் கொச்சைப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது ஒரு வெப் சீரிஸ். இதற்கு நம் சமூகம் என்ன செய்யப்போகிறது. தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் தயவு செய்து அனைவரும் கையெழுத்து போடவும். வெப் சீரிஸ் இன் பெயர் godman. Zee5 இல் வரும் ஜூன் 12mf வரபோகின்றது. அதற்கு முன் நம் அனைவரும் அதை தடை செய்ய போராட வேணும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களாகிய நீங்களும் இந்த இணையதளத்தில் உங்களின் புகார்களை பதிவு செய்யலாம். புகார் தெரிவிக்க அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்....http://chng.it/NYdG6CrWKc

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X