சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வேறுபட்ட முகக்கவசம்!

Added : மே 28, 2020
Share
Advertisement
 வேறுபட்ட முகக்கவசம்!

இன்னும் பல மாதங்களுக்கு தள்ளியே இருங்கள். இது தான் மருத்துவ உலகம், கொரோனாவை தவிர்ப்பதற்கு சொல்லும் முதல் டிப்ஸ். இதற்கு பலவகை உத்திகளை வடிவமைப்பாளர்கள் உலகெங்கும் முன்வைத்து வருகின்றனர்.
அண்மையில் இத்தாலியை சேர்ந்த மார்க் ஸ்டுடியோஸ், ஒரு புதிய, எளிய முகக்கவசத்தை வடிவமைத்து அசத்தியிருக்கிறது. 'சோபியோ' (Soffio) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முகக் கவசம், தனி நபர் பாதுகாப்பு உடைகளிலேயே, மிகவும் வித்தியாசமானது என்பது பார்த்ததுமே தெரிகிறது.
பார்வையை மறைக்காத பிளாஸ்டிக் தாளை வெட்டி, பி.வி.சி., சட்டகத்தில் மாட்டி செய்யப்பட்டது இந்த முகக்கவசம். பி.வி.சி., சட்டகத்தை காற்றால் நிரப்பினால், விரைப்பாகி, தலையில் கச்சிதமாக பொருந்துகிறது. இதன் தயாரிப்புச் செலவு வெறும், 85 ரூபாய் தான் என்கின்றனர் முகக்கவசத்தின் வடிவமைப்பாளர்கள்.இந்த முகமூடியின் சட்டகத்தில், அல்லது கண்ணாடி தாளில் கம்பெனி சின்னங்களை விளம்பரம் செய்ய கட்டணம் வாங்கிக்கொண்டு, இலவசமாகவும் வினியோகம் செய்யலாம் என்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள்.
கட்டடங்கள், பூங்கா, உணவகம் என்று பொது இடங்களில், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக, நுால் வேலிகள், மரக் கட்டைகள் போன்றவற்றை வைப்பதற்கு இது மாற்றாக இருக்கும்.தவிர, இந்த வகை முகக்கவசத்தை எல்லோரும் அணிந்தால், அடுத்து கைகளை சுத்தமாக வைத்திருப்பதில் மட்டுமே கவனம் செலுத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X