சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பொதுவெளியில் ஆரோக்கிய சேது ஆப்!

Added : மே 28, 2020
Share
Advertisement
பொதுவெளியில் ஆரோக்கிய சேது ஆப்!

மத்திய அரசு, கொரொனா பரவலை கட்டுப்படுத்தவும், நோயாளிகளின் சந்தேகங்களை தீர்க்கவும், சிகிச்சையை விரைவுபடுத்தவும், ஆரோக்கிய சேது செயலியை வெளியிட்டது. இதை ஒன்பது கோடி பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்துஉள்ளனர். இதனால், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட முதல் பத்து செயலிகளுள் ஆரோக்கிய சேதுவும் ஒன்றாகிஉள்ளது.
இருப்பினும், இந்த செயலில், தனி நபர் தகவல்களை, பிறருக்கு தாரைவார்த்துவிடும் ஆபத்து இருப்பதாக, மென்பொருள் வல்லுனர்கள் சுட்டிக்காட்டினர். இந்த விமர்சனத்தை போக்கவும், குடிமக்களின் தகவல் பாதுகாப்பை உறுதி செய்யவும், மத்திய அரசு ஆரோக்கிய சேது செயலி மென்பொருளை, 'ஓப்பன் சோர்ஸ்' எனப்படும் 'திற மூல' மென்பொருளாக அறிவித்துள்ளது.
இதனால், மென்பொருள் நிரல் எழுதத் தெரிந்த எவரும், இந்த செயலியின் நிரல்களை அலசி, அதில் ஏதும் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்ட முடியும். அந்த பிழைகளை திருத்தம் செய்துவிட்டால், செயலியின் பாதுகாப்பு கூடும்.இந்த முயற்சியை இந்திய மென்பொருள் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X