பொது செய்தி

தமிழ்நாடு

ரிப்பன் மாளிகையில் 60 பேருக்கு கொரோனா

Updated : மே 29, 2020 | Added : மே 29, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ripon building, covid 19, corona virus, ரிப்பன் மாளிகை, கொரோனா

சென்னை: சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை, 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில், கொரோனா பாதிப்பு, 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி தலைமையிடமான, ரிப்பன் மாளிகை வளாக அம்மா மாளிகையில், அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 60க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil newsஇதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தடுப்பு பணிகளில், மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வாயிலாக, அம்மா மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தொற்று ஏற்பட்டு பரவ துவங்கியுள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொற்று பரவுவதும் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
30-மே-202005:40:16 IST Report Abuse
தல புராணம் ரிப்பன் கட்டி சிறப்பு விழா நடத்துங்க..
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
30-மே-202002:42:28 IST Report Abuse
Panneerselvam Chinnasamy பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
Rate this:
Cancel
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
30-மே-202001:06:18 IST Report Abuse
babu Still why to call the building as rippon building change the name in the honour of VOC , Barathiyar , or any other Tamil Nadu freedom fighters name. Strictly no politicians (old or new) name.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X