பொது செய்தி

தமிழ்நாடு

சர்ச்சைகள் நிறைந்த 'காட்மேன்' டீசர் நீக்கம்

Updated : மே 29, 2020 | Added : மே 29, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
Godman, Godmanteaser,

சென்னை : இந்து சமூகத்தை அவமதிக்கும் வகையிலும், பிரமாண சமூகத்தை இழிவுப்படுத்தியும், ஆபாசங்கள் நிறைந்து வெளியான காட்மேன் வெப்சீரிஸின் டீசருக்கு எழுந்த எதிர்ப்பால் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் 'காட்மேன்' என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த சீரிஸின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் இந்து மதத்தை அவமதிக்கும் விதமான காட்சிகளும், பிராமணர் சமூகத்தை இழிவுப்படுத்தும் வசனங்களும், உச்சக்கட்ட ஆபாச காட்சிகளும் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிராமண சமூகத்தை இழிவுப்படுத்திய காட்மேன் படக்குழு மற்றும் ஜீ5 தளத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி இணையதளங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்து. மேலும் சில இடங்களில் இந்த வெப்சீரிஸ் குழு மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பலரும் சமூகவலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர்.


latest tamil news
இந்நிலையில் சர்ச்சைகள் நிறைந்த காட்மேன் டீசரை சம்பந்தப்பட்ட ஜீ 5 நிறுவனம் யு-டியூப்பில் இருந்து நீக்கிவிட்டது. அதற்கு பதிலாக மற்றுமாரு புதிய டீசரை இன்று(மே 29) வெளியிட்டனர். பிறகு அதையும் நீக்கிவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA G india - chennai,இந்தியா
30-மே-202019:09:54 IST Report Abuse
SIVA G  india சமூக ஊடகங்களுக்கு சட்ட பாதுகாப்பை நீக்கி டிரம்ப் உத்தரவு என்பது சமூக ஊடகங்களுக்கு சட்ட பாதுகாப்பை நீக்க அமித்ஷா உத்தரவு என வந்தால் இந்த நா00களின் கொட்டம் அடக்கபடும்.அதிக பட்ச 10 ஆண்டு சிறை தண்டனையுடன் சொதத்துகள் அனைத்தும் முடக்கபட வேண்டும்.
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
30-மே-202014:03:16 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI இந்த படத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் .இந்துக்களுக்கு குரல் கொடுக்கும் தினமலருக்கு நன்றி நன்றி நன்றி
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
30-மே-202013:20:40 IST Report Abuse
Sridhar புலம்பறத விட்டுட்டு கேசப்போடுங்கய்யா. சட்டதுனால, சவுக்கடி கொடுங்கய்யா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X