அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை

Updated : மே 31, 2020 | Added : மே 29, 2020 | கருத்துகள் (78)
Share
Advertisement
அனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை

சென்னை,: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சி கூட்டம், நாளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறஉள்ளது.'தமிழகத்தில், கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. நோய் தொற்று கட்டுக்குள் இல்லை' என, ஸ்டாலின், நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார். ஆனால், 'கட்டுக்குள் உள்ளது' என, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று தெரிவித்தார்.

மருத்துவக் கல்லுாரிகளில், மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்ற, குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்க, தி.மு.க., தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம், நாளை நடைபெறும் என, அக்கட்சி அறிவித்துள்ளது.அதில், இட ஒதுக்கீடு, கொரோனா தடுப்பு பணியில், அரசுகளின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 லட்சம் மனுக்கள்'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:ஊரடங்கால் பாதிகக்கப்பட்ட மக்களிடம் இருந்து பெறப்பட்டு, முதல் கட்டமாக, ஒரு லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல் வழியாக, மேலும், ஆறு லட்சம் கோரிக்கை மனுக்கள், முதல்வரின் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். உடனே உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தி.மு.க.,வில் உள்ள பல்வேறு அணி நிர்வாகிகளுடன், ஸ்டாலின் நேற்று கலந்துரையாடினார். கொரோனா ஊரடங்கு காலத்தில், அந்தந்த அணிகள் சார்பில் செய்யப்பட்டு வரும், நல உதவிகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனைகள் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NATARAJAN - Coimbatore,இந்தியா
03-ஜூன்-202009:46:45 IST Report Abuse
NATARAJAN இந்த ஜூன் மாதத்திலாவது பரப்பாமல் மக்களுக்கு நல்லது ஏதாவது செய்யுங்க
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
31-மே-202021:36:32 IST Report Abuse
konanki இந்த தடவையாவது மாஸ்க் ஒழுங்காக அணிவாரா?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
31-மே-202017:21:57 IST Report Abuse
sankaseshan ஜீ தமிழில் வரப்போகிற ஜாதி மத துவேஷ தொடர் பற்றி விவாதிக்க படுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X