பொது செய்தி

இந்தியா

விமானப் போக்குவரத்துக்கும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு: மத்திய அரசு

Updated : மே 29, 2020 | Added : மே 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Locusts, Air Plane, DGCA, Locusts attacks, India, agriculture, farmers, Agriculture department,  வெட்டுக்கிளிகள்

புதுடில்லி: இந்தியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளால் விமானப் போக்குரவத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள், ராஜஸ்தான், ம.பி., உள்ளிட்ட மாவட்டங்களில், அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: விமானங்கள் இறங்கும் போதும், புறப்படும் போதும், தாழ்வாக பறக்கும் தன்மை கொண்ட வெட்டுக்கிளிகளால் பாதிப்பு ஏற்படும். விமான இஞ்சின், ஏசி கட்டுப்பாட்டு அறைக்குள்ளும் அவைகள் செல்ல வாய்ப்பு உள்ளது. விமானம் செல்லும் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் செல்லும் போது, சென்சார் பிரச்னை ஏற்படும். இதனால் விமானிக்கு வேகம், உயரம் சார்ந்த தகவல்கள், தவறாகலாம்.


latest tamil newsவிமானத்தில் குறுக்கிடும் வெட்டுக்கிளிகளை வைப்பர் பயன்படுத்தி அப்புறப்படுத்தினாலும், விமானியின் கவனத்தை திசை திருப்பும் திறனுள்ளவை. அவை இரவில் பறக்காது என்பது நமக்கு ஆறுதல். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
30-மே-202008:06:15 IST Report Abuse
Nathan வெட்டுக்கிளிகளை உணவாக கொள்ளும், குஞ்சுக்கு இறை தேடும் பறவை இனங்களில், முக்கியமானது குருவிகளும், சிறிய வானம்பாடி , ரெட்டைவால் முதலியவை. அவை என்ன காரணத்தாலோ ( மைக்ரோ வேவ் டவர், பூச்சி கொல்லி மருந்துகள், வீடுகளில் கூடு அமைக்க வகையில்லாமை, விஷ மயமாகிய நகராக காற்று) மிக மிக குறைந்தன. மனிதர்களும், இவற்றை தரையில் இறக்கை முளைக்கும் முன்பே கொல்ல தவறி விட்டனர்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-மே-202001:21:10 IST Report Abuse
தமிழ்வேல் ட்ரான் மூலம் மருந்து தெளித்தாலும் ட்ரானைப் பாதிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X