அரசியல் செய்தி

தமிழ்நாடு

உலக சுகாதார நிறுவன அறிவுரையை கடைப்பிடிக்க வேண்டும்: ராமதாஸ்

Added : மே 30, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 உலக சுகாதார நிறுவன அறிவுரையை கடைப்பிடிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை : 'உலக சுகாதார நிறுவனம் காட்டிய அறிவுரைகளை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் பசுமைக்கு சாதகமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என கூறியுள்ள, உலக சுகாதார நிறுவனம், அதற்காக சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.இயற்கையை பாதுகாக்க வேண்டும். வீடுகளிலும், சுகாதார கட்டமைப்புகளிலும், தண்ணீர், துப்புரவு வசதிகளுடன், காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தாங்கக்கூடிய, துாய்மையான மின்சக்தியும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனாவுக்கு பின், மக்கள் துாய காற்றை சுவாசிப்பதை உறுதி செய்யும் வகையில், காற்று மாசை குறைக்கும் துாய மின்திட்டங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும்.மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கட்டுபடியாகும் விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நீடித்த போக்குவரத்தில் துவங்கி, ஆரோக்கியமான இல்லம் வரை, நகர்ப்புற திட்டமிடலின் அனைத்து அம்சங்களிலும், ஆரோக்கியத்தை இணைக்கும் வகையில், மாநகரங்களை அமைக்க வேண்டும்.கொரோனாவுக்கு பின், பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மற்றும் உலக சுகாதார நிறுவனம் காட்டிய அறிவுரைகளை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உறுதியுடன் ஏற்க வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Varadharajulu - Chennai,இந்தியா
30-மே-202012:47:18 IST Report Abuse
K.Varadharajulu நீங்க ........
Rate this:
Cancel
mariyappangopinathan - Chennai,இந்தியா
30-மே-202010:20:16 IST Report Abuse
mariyappangopinathan ஏம்ப்பா உலக சுகாதார நிறுவனமே ஒரு டூபாக்கூர்ன்னு அமெரிக்கா ஜகா வாங்கிடுச்சு. இந்தியா எப்படி உலக சுகாதார நிறுவன அறிவுரையை பின்பத்தலாம்? அது அமெரிக்காவை பகைச்சிக்கிற மாதிரில்ல ஆயிடும்?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
30-மே-202008:56:36 IST Report Abuse
RajanRajan வோணாம் இத்தோட வுட்டுரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X