அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ நிபுணர் குழுவினருடன் இ.பி.எஸ்., இன்று ஆலோசனை

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
tamil nadu, tn cm, tamil nadu cm, chief minister K Palaniswami, coronavirus tamil nadu, tn news,
மருத்துவ நிபுணர், குழுவினர், இ.பி.எஸ்., இன்று, ஆலோசனை

சென்னை : தமிழகத்தில், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் இ.பி.எஸ்., இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில், நான்காம் கட்ட ஊரடங்கு, நாளை நிறைவடைகிறது. தற்போது, ஊரடங்கு அமலில் இருந்தாலும், காலையில் இருந்து இரவு, 7:00 மணி வரை, கடைகள் திறக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அரசு அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்குகின்றன.latest tamil newsசென்னையில், 25 சதவீதம், பிற மாவட்டங்களில், 50 சதவீத பணியாளர்களுடனும், தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது.அரசு ஊழியர்கள், அலுவலகம் சென்று வர, குறைந்த அளவில், அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷாக்கள் இயங்க, அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருவரை மட்டும் ஏற்றிச் செல்ல வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
எப்போது ஊரடங்கு விலக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், மக்கள் உள்ளனர். ஆனால், நோய் பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால், ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட வாய்ப்பில்லை என, கூறப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன், மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது, நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஊரடங்கு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக, தகவல் வெளியானது.இந்நிலையில், இன்று பகல், 12:30 மணிக்கு, மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து முடிவு செயயப்படும். வங்கி அலுவலர்களுடன் ஆலோசனை: மருத்துவ நிபுணர் குழுவினருடனான ஆலோசனைக்குமுன், மாநில அளவிலான, வங்கி அலுவலர்கள் கூட்டம், முதல்வர் தலைமையில் நடக்க உள்ளது. இதில், தொழில் நிறுவனங்களுக்கு, கடன் வழங்குவது உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.


சென்னையில் முழு ஊரடங்கு?சென்னையில், கொரோனா நோய் பரவல் அதிகரித்தபடி உள்ளது. தினமும், 500க்கும் மேற்பட்டோர், நோய் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்; இறப்பும் அதிகரித்து வருகிறது.எனவே, நோய் பரவலை கட்டுப்படுத்த, ஐந்து நாட்கள் முழு ஊரடங்கை, சென்னையில் மட்டும் அமல்படுத்தும்படி, அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naresh Giridhar - Chennai,இந்தியா
30-மே-202009:36:26 IST Report Abuse
Naresh Giridhar ஆலோசனை ,லோசனை , சனை . இதுதான் இவரின் ஆட்சி. ஜெயாவின் வீட்டை அடைவதிலும், ஸ்டாலினுடன் சண்டை போடுவதிலும், தனக்கு பிடிக்காதவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு தான் இவர் ஆலோசனை பண்ணுகிறார்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
30-மே-202008:44:20 IST Report Abuse
RajanRajan குரானா இந்த புரட்டு புரட்டுதே அம்மாவழி எதுன்னே தெரியுராம பண்ணிட்டுதே தேவுடு.
Rate this:
Cancel
venkat san - salem,இந்தியா
30-மே-202008:29:43 IST Report Abuse
venkat san green zone ku bus vidunga ..bus travel ku oru rules potu follow pana solunga.. makkal elorum tempo , lorry, kutty yaana(Tata ac), etho adu maadu kuttu pora mathiri poitu irukanga....itha yen government purinjikive mattakithu. Oru pakka neega close pana ,innoru pakkam Pani poranga .ithu illana athu,athu illana ithu .. paniranga ungalala control pana mudiyathu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X