பொது செய்தி

இந்தியா

தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர்

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

கொச்சி: பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் உதவியால், கேரளாவிலிருந்து, 167 தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு தனி விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.



latest tamil news



பாலிவுட் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருபவர் சோனு சூட், 46. ஒஸ்தி, சந்திரமுகி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். சமூக சேவை செய்வதில் ஆர்வம் உள்ள சோனு சூட், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினக் கூலிகளாக வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும், மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசித்து வரும் ஏழை தொழிலாளர்களுக்கு உணவு பொருட்களையும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் கூலி வேலை பார்த்து வந்த, 147 பெண்கள் உட்பட, 167 தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலமான ஒடிசாவுக்குச் செல்ல முடியாமல் தவிப்பதாக, சில தன்னார்வ அமைப்புகள் சார்பில், சோனு சூட்டுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு விமானத்தை வாடகைக்கு அமர்த்தி, அதில், 167 தொழிலாளர்களையும் அழைத்து வர ஏற்பாடு செய்தார். இதற்கான செலவு முழுவதையும் அவர் ஏற்றார். இந்த விமானம், நேற்று காலை, 8:00 மணிக்கு கொச்சியிலிருந்து புறப்பட்டு, காலை, 10:00 மணிக்கு புவனேஸ்வர் வந்தடைந்தது.


latest tamil news



இது குறித்து சோனு சூட் கூறுகையில், ''வறுமையில் வாடுவோருக்கு சரியான நேரத்தில் உதவுவதை விட, வேறு பெரிய நற்செயல் எதுவும் இல்லை என கருதுகிறேன். என்னுடைய இந்த முயற்சிக்கு உதவிய, 'ஏர் ஏசியா' விமான நிறுவனத்துக்கு நன்றி,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
30-மே-202022:24:54 IST Report Abuse
adalarasan வாழ்த்துகிறோம்இவருடைய மனித நேயத்தை நினைத்து அதேசமயம், நம்ம ஊரிலும், இருக்கிறார்களே, நடிகர்கள், சினிமா குடும்பம் எல்லாம்?என்ன என்று சொல்வது…?
Rate this:
Cancel
R S BALA - Tiruvallur,இந்தியா
30-மே-202018:25:10 IST Report Abuse
R S BALA இனி இவர் ஹீரோவாக நடிக்க வேண்டும் ... நல்ல உள்ளம் வாழ்க ... உங்கள் நற்பணி தொடர்க ....
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
30-மே-202015:31:57 IST Report Abuse
Ram Our Tamil BIG BOSS in movies are utter waste PLEASE ignore them and do not watch their movies
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X