சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரிக்குள் வந்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் அதிர்ச்சி

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்த வெட்டுக்கிளிகளால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.வட மாநிலங்களில், ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், வெட்டுக்கிளிகள் வருகை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், நேரலகிரியில்
locusts, krishnagiri, locust attack, tamil nadu, tn news, tamil news, கிருஷ்ணகிரி, வெட்டுக்கிளிகள்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்த வெட்டுக்கிளிகளால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வட மாநிலங்களில், ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், வெட்டுக்கிளிகள் வருகை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில், நேற்று மாலை, ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்தன. இவை, வட மாநிலங்களில் இருந்ததை போல, பழுப்பு நிறத்தில் இருந்ததால், விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


latest tamil newsஇது குறித்து, அவர்கள், வேப்பனஹள்ளி, தி.மு.க., - எம்.எல்.ஏ., முருகன் மற்றும் வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இரவாகி விட்டதால், நேற்று யாரும் நேரலகிரி செல்லவில்லை. இன்று வேளாண் அதிகாரிகள், அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தூத்துக்குடி,இந்தியா
02-ஜூன்-202008:23:15 IST Report Abuse
தமிழன் பறவைகள் விதைத்து, இயற்கையால் வளர்க்கப்பட்ட மரங்களை நாம் அழிக்கும் போது, மனிதனின் உழைப்பை மற்ற உயிரினங்கள் வீணாக்குவதை நாம் தவறேன்று கூற இயலாது. இந்த வெட்டுக்கிளிகள் தனது வசிப்பிடத்தை, வாழ்வாதாரத்தை மனிதன் அழித்ததால் பசியால், தாகத்தால் இறந்து போன பறவைகளின் மறுபிறப்பாகக் கூட இருக்கலாம்..
Rate this:
Cancel
தமிழன் - தூத்துக்குடி,இந்தியா
02-ஜூன்-202008:18:10 IST Report Abuse
தமிழன் உயரமாக பறக்க ஏதுவான சிறகு இல்லாத இந்திய வெட்டுக்கிளி எப்படி அயல் நாட்டிலிருந்து வந்திருக்க முடியும். அரசிடம் பணம் பறிக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
Rate this:
Cancel
தமிழன் - தூத்துக்குடி,இந்தியா
02-ஜூன்-202008:16:02 IST Report Abuse
தமிழன் இது இந்திய வெட்டுக்கிளி. நான் சிறுவயதில் இதைப் பிடித்து விளையாடியிருக்கிறேன். இந்த வெட்டுக்கிளியால் நீண்ட தூரம் பறக்கவோ, தப்பியோடவோ இயலாது. சிறு பறவைகளை இனங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் இவ்வளவு எண்ணையில் கூட்டமாக இருக்கிறது. ஆனாலும் ஒரு பாதிப்பு இல்லை. அரசிடமிருந்து நிவாரணம் என்கிற பெயரில் பணத்தை பிடுங்க சிலர் நடத்தும் நாடகம் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X