பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்களுக்கு விருது; சபாநாயகர் பரிந்துரை

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
tamil nadu news, tn speaker, parliament, politics,
விருது, சபாநாயகர், பரிந்துரை

சென்னை : 'பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்ட உறுப்பினருக்கு, விருது வழங்குவது போல, சட்டசபையில், சிறப்பாக செயல்படும் உறுப்பினருக்கு, விருது வழங்க வேண்டும்' என, தமிழக சபாநாயகர் தனபால் பரிந்துரை செய்துள்ளார்.

சட்டசபையை சச்சரவு இல்லாமல், சிறப்பாக நடத்தி செல்ல உதவும் குழுவின் தலைவரான, உத்தர பிரதேசம் மாநில சபாநாயகர், நேற்று அனைத்து மாநில சட்டசபை சபாநாயகர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாடினார்.


latest tamil news


அப்போது, தமிழக சட்டசபை சபாநாயகர், தனபால் பேசியதாவது: அனைத்து சட்டசபைகளுக்கும், தனி விதிகள் உள்ளன. சபையை சிறப்பாக நடத்த, உறுப்பினர்கள் தவறு செய்வதை தடுக்க, சபாநாயகருக்கு தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதை, முறையாக பயன்படுத்த வேண்டும்.சபையில் ஒழுங்கை பராமரிப்பது ஒரு கலை. உறுப்பினர்களுக்கு விதிகள் குறித்து, பயிற்சி அளிக்க வேண்டும். இது, அவர்கள் ஒழுங்காக செயல்பட உதவும்.

பார்லிமென்டில் ஒவ்வொரு ஆண்டும், சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களை தேர்வு செய்து, சிறந்த உறுப்பினருக்கான விருது வழங்கப்படுகிறது. அதேபோல, சட்டசபையிலும் வழங்க வேண்டும். இது மற்ற உறுப்பினர்கள், சட்டசபை விதிமுறைகளை பின்பற்ற ஊக்கம் அளிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
30-மே-202016:26:41 IST Report Abuse
Baskar எந்த எம்.எல்.எ அதிகம் லஞ்சம் வாங்குபவனுக்கு விருது பிரியாணி கடையை அடித்து நொறுக்கியவனுக்கு விருது மணல் கொள்ளை அடிப்பவனுக்கு விருது இன்னும் அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் இடமில்லை. அதே போல் மந்திரிகளுக்கு கொடுக்கலாம்.
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
30-மே-202013:49:58 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI அதிகமா லஞ்சம் அதிகமா கொள்ளை அதிகமா கொலை கண்டிப்பா இவர்களுக்கு விருது தரணும்
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
30-மே-202012:09:28 IST Report Abuse
.Dr.A.Joseph இவர்களின் சம்பளத்தை முதலில் கணிசமாக குறையுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X