கொரோனாவுக்கு எதிரான களப்பணியில் 38 ஆயிரம் டாக்டர்கள்| Over 38,000 doctors volunteer to join fight against COVID 19 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு எதிரான களப்பணியில் 38 ஆயிரம் டாக்டர்கள்

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (1)
Share
Doctors, covid 19, coronavirus, India, corona, டாக்டர்கள், கொரோனா, களப்பணி

புதுடில்லி: கொரேனாவுக்கு எதிரான போராட்டத்தில், 38 ஆயிரம் டாக்டர்கள் களப்பணியாற்றி வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வைரசுக்கு எதிரான போராட்டத்தில், டாக்டர்கள் தாமாக முன்வரவேண்டும் என மத்திய அரசு, கடந்த மார்ச் மாதம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், ஓய்வுபெற்ற டாக்டர்கள் உட்பட மொத்தம், 38 ஆயிரத்து, 162 டாக்டர்கள், தாமாக முன்வந்து, களப் பணியாற்றி வருவதாக, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X