பொது செய்தி

இந்தியா

சீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி : லடாக் எல்லைக்குள் முன்னேற முயன்ற சீன ராணுவத்தினரை, இந்திய ராணுவ வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இந்தியா - சீனா எல்லையில், லடாக்கில், இந்திய ராணுவம், கடந்த மூன்றாண்டுகளாக சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில், இம்மாத துவக்கத்தில், கால்வன் நலா
India, China, LAC,Galwan Nala, india china border dispute,
 இந்தியா, சீனா

புதுடில்லி : லடாக் எல்லைக்குள் முன்னேற முயன்ற சீன ராணுவத்தினரை, இந்திய ராணுவ வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா - சீனா எல்லையில், லடாக்கில், இந்திய ராணுவம், கடந்த மூன்றாண்டுகளாக சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில், இம்மாத துவக்கத்தில், கால்வன் நலா பகுதியில், சீனா, தன் படையை குவிக்கத் துவங்கியதால், பதற்றம் ஏற்பட்டது.


latest tamil news


இது குறித்து, ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் உள்ள, கால்வன் நலா பகுதிக்கு முன்னேறி, இந்திய ராணுவத்தின், 14வது ரோந்து முனையத்திற்கு மிக நெருக்கமாக, படைகளை நிறுத்த வேண்டும் என்பதே அதன் திட்டம். இந்த முனையத்திற்கு அருகில் தான், இந்திய ராணுவம், பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பகுதியில் படைகளை நிறுத்தி, கட்டுமான பணிகளை தடுக்க வேண்டும் என்பதே, சீன ராணுவத்தின் நோக்கம்.

இதை புரிந்து கொண்ட இந்திய ராணுவம், மின்னல் வேகத்தில் செயல்பட்டு, கால்வன் நலா பகுதியில் படைகளை குவித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத சீன ராணுவத்தினர், மேற்கொண்டு முன்னேறும் திட்டத்தை கைவிட்டனர். தற்போது, இந்திய ராணுவத்தின், 'கே.எம்., 120' முகாமில் இருந்து, 17 கி.மீ., துாரத்தில் சீன ராணுவம் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
02-ஜூன்-202017:14:59 IST Report Abuse
Tamilnesan முன்னாள் பிரதமர் நேரு அவர்களான்ல் வந்த வினை இது.
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
02-ஜூன்-202005:06:42 IST Report Abuse
B.s. Pillai China knows only one language.That is blackmail. It was blamed for the corona virus and it takes violence and blackmail as its reply for pointing out its virus orientation from China. That is why it concentrates its troops along our border.The story of Nepal going agianst Indian interests also is the indirect influence of China on Nepal political leaders. We do not need military force to subdue China.The people of India just do one thing.STOP BUYING CHINESE MANUFACTURED PRODUCTS. It will hit china more than Tanks or Army action against its agressive nature. We can achieve this again without shedding one of blood by just boycotting Chinese products. Let us all Indians take this solemn oath that we will not buy any product made in China to win them without shedding one of our valued Army men. This does not need any direction from our Hon. P.M. Let us all realise and do it once again swadeshi act voluntarily .
Rate this:
Cancel
ராஜா - Chennai,இந்தியா
30-மே-202016:37:09 IST Report Abuse
ராஜா ஜெய் ஜவான் ஜெய் கிஷான் எனது நாடும், மக்களும், ராணுவமும் உலக அரங்கில் தலை நிமிரும் காலம் வெகு விரைவில். அவ்வாறு நடக்கும் போது இந்தியாவில் இருக்கும் தேச விரோத சக்திகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X