மலேசிய முன்னாள் பிரதமர் பெர்சத் கட்சியிலிருந்து நீக்கம்

Updated : மே 30, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
கோலாலம்பூர்: மலேஷிய பிரதமர் முகைதீன் யாசினின் அரசை ஆதரிக்க மறுத்த, முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, பெர்சத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள், நான்கு பேரும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.தெற்காசிய நாடான மலேஷியாவில், 2018ல் நடந்த தேர்தலில், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, 94, தலைமையிலான பெர்சத் கட்சி, அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி

கோலாலம்பூர்: மலேஷிய பிரதமர் முகைதீன் யாசினின் அரசை ஆதரிக்க மறுத்த, முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, பெர்சத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள், நான்கு பேரும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.latest tamil news


தெற்காசிய நாடான மலேஷியாவில், 2018ல் நடந்த தேர்தலில், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, 94, தலைமையிலான பெர்சத் கட்சி, அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியுடனும், சிறிய கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி, தேர்தலில் வெற்றி பெற்றது; மகாதீர் முகமது பிரதமரானார். தேர்தலுக்கு முன், மகாதீர் வெளியிட்ட அறிவிப்பில், 'கூட்டணி வெற்றி பெற்றால், குறிப்பிட்ட காலம் வரை, பிரதமர் பதவியை வகிப்பேன். நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிவிட்டு, அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பேன்' என, கூறியிருந்தார்.

ஆனால், ஆட்சி பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சியை இப்ராஹிமிடம் ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. ஆனால், மகாதீர் தயக்கம் காட்டினார். இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பிப்ரவரியில், மஹாதீர், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக, பெர்சத் கட்சியின் மூத்த தலைவர் முஹைதீன் யாசினை, மன்னர் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா நியமித்தார்.எனினும், யாசின் அரசுக்கு, மகாதீர் ஒத்துழைப்பு தரவில்லை.


latest tamil news


இந்நிலையில், 18ம் தேதி நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், மகாதீர் பங்கேற்றார்.அப்போது, எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், அவர் அமர்ந்தார், இதையடுத்து, மகாதீர், பெர்சத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, அவருக்கு கட்சி தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், மகாதீரின் மகன் முக்ரீஸ் மகாதீர் உட்பட, அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
30-மே-202015:15:05 IST Report Abuse
Nathan பல் சேட்டையும், கோட்டு சூட்டையும் கழட்டிவிட்டால் , தெரு பிச்சைக்காரன்தான். சூனியத்துக்கு வயசு கிடையாது.
Rate this:
Cancel
sankar - london,யுனைடெட் கிங்டம்
30-மே-202015:13:34 IST Report Abuse
sankar அரசியலில் இருந்து ஒதுங்கிய இவர் சீடன் தலைக்கு ஆபத்து என்றவுடன் ( நஜிப் தான் ) இப்ராகிம் உடன் கூட்டணி என்று நாடகம் ஆடி மக்களை ஏமாற்றி .... தனது சீடனை காப்பாற்றி இப்ராகிமுக்கும் ஆப்பு அடித்துநாட்டை நாசமாக்கியது இந்த புண்ணியவான் மகாதீர் ..... நஜிப் மீது இருந்த வழக்குகளை முன்னரே நீர்த்து போக செய்தயிற்று ...
Rate this:
Cancel
kalyan - Tiruchirapalli,இந்தியா
30-மே-202013:34:45 IST Report Abuse
kalyan இவர்கள் பூசலைக்கண்டு முன்னாள் முதல்வர் நஜீப் உள்ளூர நகைத்துக்கொண்டிருக்கிறார். அவர்மேல் தற்போது நடக்கும் வழக்குகள் விரைவிலேயே காணாமல் போய்விட வாய்ப்புகள் மிக பிரகாசமாக உள்ளன
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
30-மே-202014:47:04 IST Report Abuse
dandyBut Najb cases are being invested in 7 countries ...all western ..he can't escape like CORONA KATTUMARAM with 1820 Indian law...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X