மருந்துகள் இருக்கு... கவலை வேண்டாம்!
உலகத்தில் இன்று வரை, கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்துகள், 110க்கும் மேற்பட்ட குழுக்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதில் பாதி, இப்போதுள்ள தடுப்பு மருந்திலிருந்து, மரபணு மாற்றி தயாரிக்கப்படுகிறது. மீதி, புதியதாக, வேகமாக தயாரிக்கப்படுகிறது.இவற்றில் பல தடுப்பு மருந்துகள், இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு அவை ஆய்வில் உள்ளன. இந்தியா, உலக நாடுகளுக்கு, தடுப்பு மருந்து மையமாக உள்ளது.இப்போது இந்தியாவில், 30 நிறுவனங்கள், தடுப்பு மருந்து தயாரித்து வருகின்றன. ஆனால், உலக சுகாதார நிறுவனம், ஏழு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.ஐ.சி.எம்.ஆர்., என்ற, இந்திய தலைமை மருத்துவ ஆராய்ச்சி கழகம், 'பாரத் பயோடெக்' நிறுவனத்துடன் இணைந்து, கொரோனா வைரஸ் மேலுள்ள, முள் போன்ற புரதத்திற்கு, 'ஆன்டிபாடி' என்ற நோய் எதிர்ப்பு புரதத்தை தயாரித்து, வெற்றி கண்டுள்ளது. இவர்கள் தான், சாதாரண புளூ, இன்புளூவென்சா வைரசுக்கு, தடுப்பு மருந்து
தயாரித்தவர்கள்.மஹாராஷ்டிரா மாநிலம், புனேவிலுள்ள, எஸ்.ஐ.ஐ., என்ற நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்துடன் இணைந்து, தடுப்பு மருந்தை வெற்றிகரமாக தயாரித்துள்ளது. இது, செப்டம்பர் மாதத்திற்குள் வெளிவரும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.பெங்களூருவில் உள்ள, ஐ.ஐ.எஸ்., என்ற இந்திய விஞ்ஞான கழகம், தடுப்பு மருந்து தயாரிப்பில் அதிக முன்னேற்றமடைந்து உள்ளது.'காடிலா ஹெல்த்கேர்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனமும், கொரோனா வைரசுக்கான, தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் தான், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா வைரசை தடுக்க, 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' என்ற மருந்தை அனுப்பி வைத்தது.
இந்த நிறுவனம் தான், பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், இம்மருந்தை, ஐ.சி.எம்.ஆர்., அனுமதி பெற்று, கொரோனா தடுப்பு மருந்தாக உபயோகிக்கிறது.
இதை வியாபாரமறியாத, திறமையற்ற, உலக சுகாதார அமைப்பு எதிர்த்து வந்தது. அந்த அமைப்பின் மீது, பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. மேல்நாட்டு அரசியல்வாதிகள் ஆதிக்கம் அதில் அதிகம்.இன்று, ஐ.சி.எம்.ஆர்., தலைமை அதிகாரியும், எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் தலைவருமான, இருதய நோய் பேராசிரியர் பலராம் பர்காவா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பின், உலக சுகாதார அமைப்பு, தன் மறுப்பை, விலக்கிக் கொண்டது. இது, அந்த நிறுவனத்திலுள்ள ஊழல் தன்மையை காட்டுகிறது. டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், இந்த தடுப்பு மருந்தை, கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கின்றனர்.உலக சுகாதார அமைப்பில், உலகத்தில் உள்ள, ஊழல் அரசியல்வாதிகளின் ஆதரவில் பதவிக்கு வந்தவர்கள் தான் அதிகம். இன்று, சீனாவின் ஆளுமை அதிகமாக உள்ளது.
ஏனெனில், இப்போதைய தலைவர் டெட்ராஸ் அதோனன், எத்தியோப்பியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர். இப்போது, நம் நாட்டின் மத்திய சுகாதார அமைச்சர், ஹர்ஷ் வர்த்தன், இதன் நிர்வாக தலைவராக வந்துள்ளார்.மத்திய சுகாதார துறையும், ஐ.சி.எம்.ஆர்., குழுவும் சேர்ந்து, ஹைட்ராக்ஸிகுளோரோக்வின் என்ற மாத்திரையை, கொரோனா நோய் கண்டவர்களுக்கு, மருந்தாகவும் கொடுக்கலாம்; மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர், நர்சுகள் சார்ந்தவர்கள் உட்கொள்ளலாம் என்று
கூறியுள்ளது.கொரோனா வைரஸ் மேலுள்ள புரதத்தை எதிர்த்து அழிக்கவல்ல, டி.என்.ஏ., தடுப்பு மருந்தை தயாரித்து, பரிசோதனையில் உள்ளது.ஆர்.என்.ஏ., மரபுக் கூடு மாற்றம் முறையில், தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து, கொரோனா வைரசை அழித்து விடுகிறது. இது, ஆஸ்திரேலிய பல்கலைகழகத்தோடு இணைந்து செயல்படுகிறது. ஜெர்மனி, பாரீஸ், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் இந்த, தடுப்பு மருந்து ஆய்விலுள்ளது. இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள், இந்தியாவோடு இணைந்து செயல்படுகின்றன.
ஐந்து வகை தடுப்பு மருந்துகள்
1. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு, அடினே வைரஸ் தடுப்பு மருந்து, 1 பில்லியன் டாலருடன், பரோவு கம்பெனியுடன் கூட்டு முயற்சி. இதில், 'மைக்ரோசாப்ட்' கம்ப்யூட்டர் நிறுவன தலைவர், பில் கேட்ஸ் பங்கு உள்ளது.
2. எம்ஆர்.என்.ஏ., மார்டன் ஆர். என்.ஏ., தடுப்பு மருந்து, புதிய தொழில்நுட்பம், மே, 18ல் ஆய்வு முடிந்தது.
3. ஹைசின் கடுமை தன்மையை குறைத்து, வீரியமுள்ள வைரஸ் தடுப்பு மருந்து.
4. வைரசை கொன்று, அதன் துகளில் தயாரிக்கும் தடுப்பு மருந்து.
5. ஹைசினை தாக்கவல்ல, அதேபோல் உள்ள புரதத்தை உபயோகப்படுத்தி, தடுப்பு மருந்தை தயாரிப்பது.
இந்த தடுப்பு மருந்து உடனடியாக எல்லாருக்கும் கிடைக்காது. இதை முறைபடுத்தி விநியோகம் செய்ய வேண்டும்.இறுதியாக, இத்தாலியில் கொரோனா வைத்தியத்துக்கு தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய டாக்டர்கள், உலக சுகாதார அமைப்புக்கு எதிராக, கொரோனா வைரசால் இறந்த நோயாளிகளின் உடலை, பிணப் பரிசோதனை செய்து, இதில் சில உண்மைகளை கண்டறிந்து
வெளியிட்டள்ளனர்.கொரோனா மரணத்திற்கு, ரத்த நாளங்களில் ஏற்படும் ரத்த உறைவு தான் காரணமாகிறது என்பது தெளிவாகி உள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் நுரையீரலிலும், உடலிலும் நுண்கிருமிகள் தாக்கி, அவற்றை சிதைத்து, செயலிழக்க செய்கிறது என்பது தான் உண்மை.எனவே, இதற்கு, 'வென்டிலேட்டர்' தேவையில்லை என, இத்தாலிய பேதாலாஜிஸ்ட் கருத்து கூறியுள்ளனர்.மேலும், இதற்கு, ஆன்டிபயாடிக், ஆஸ்பரின் என்ற, ரத்தகட்டி உறைவதை தடுக்கும் மாத்திரைகள், நோய் வீரியத்தை குறைக்கும், ஆன்டி இன்பிளமேட்டரி போன்ற மருந்துகளை உபயோகப்படுத்தி, குணப்படுத்திய விபரத்தை, உலக சுகாதார அமைப்பு, உலகிற்கு தெரியப்படுத்தவில்லை.இந்த எளிய, உயிர் காக்கும் மருந்து தான், சமீபத்தில், சென்னை ராஜிவ் காந்தி, ஓமந்துாரர் அரசு மருத்துவமனைகளில், மருத்துவ பேராசிரியர் குழுவால் பல நோயாளிகளுக்கு கொடுத்து, காப்பாற்றியுள்ளனர். இதில் ஒரு டாக்டரும் குணமடைந்துள்ளார்.
ஆஸ்பிரின், ஆப்ரேரெக்ஸ் போன்ற மாத்திரைகள், இத்தாலியில் கொடுக்கப்படுகின்றன.
கொரோனா மருந்துகள்
1.ரெம்டெசிவிர்
2. பெவிபிரவிர்
3. யுமிபெனோவிர்
4. பைடோகெமிக்கல்
5. பி.சி.சி., தடுப்பூசி
6. ஹைட்ராக்ஸி குளோரோ க்வின்
7. பிளாஸ்மா தெரபி
இந்த மேற்கூறிய மருந்துகள் அனைத்தும், இப்போது பல்வேறு வைரஸ் நோய்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் சந்தைக்கு வரும்.இந்த மருத்துவ சந்தை, சர்வதேச வல்லமையுடையது. 3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இதனால் எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் இதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த மருந்துகளின் முக்கிய வேலைமருந்து உட்கொண்டவுடன், இது வைரசின் இனப்பெருக்கத்தை, அதாவது வைரஸ் பல்கிப் பெருகும் சக்தியை அழித்து விடுகிறது. உதாரணம், காபியில் சர்க்கரைக்கு பதில் உப்பு போட்டால் எப்படி பருக முடியாதோ, அதுபோல உடலிலுள்ள செல்களிலுள்ள திரவத்தை மாற்றுகிறது. இதனால் வைரஸ் இனம் அழிகிறது.
அமெரிக்காவில்...
கொரோனா வைரசுக்கு ஏற்ற மருந்தாக, அமெரிக்கவிலுள்ள கிளீடு என்ற நிறுவனம், இன்று பயன்படுத்தப்படும் வீரியமிக்க மருந்தான, ரிமிடேவிர் என்ற மருந்தினை, கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில், கொரோனா நோய்த் தாக்கம் ஏற்பட்ட நிலை மோசமாகும் போது உபயோகிக்கப்படுகிறது. பின் வெற்றிகரமாக நோயாளிகள் குணமடைகின்றனர்.
இது, அமெரிக்காவில், பல நோயாளிகளுக்கு கொடுத்த பின், இப்போது எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. இது, ஆண்டனி பெஸ்லி என்ற, அமெரிக்க தொற்று நோய் கழக தலைவர், அதிபர் டிரம்ப் முன்னிலையில் அறிவித்தார்.மூன்று மாதங்களுக்கு, பிரான்ஸ் நாட்டிலுள்ள நைஸ் நகரில், ஹைட்ராக்ஸி குளோரோக்வின் மருந்துடன், ஆல்த்ரேசின் என்ற மாத்திரையும் கொடுத்து வெற்றி கண்டுள்ளனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ள மருத்துவர்கள், 'ஐவெர்மெக்டின் டாக்சிசைக்லின்' மருந்துகளை கொடுத்து குணப்படுத்தியுள்ளனர்.இவ்வளவு மருத்துவ முறைகளும், மருந்துகளும் இருக்கும் நிலையில் மனித இனம் அச்சத்தை தவிர்த்து, கொரோனாவை எதிர்கொள்வோம்.
விலகியிருப்போம்! முகக்கவசம் அணிவோம்! கொரோனாவை வென்று வாழ்வோம்! தொடர்புக்கு: போராசிரியர் டாக்டர் சு.அர்த்தநாரிஇ - மெயில்:prabhuraj.arthanaree@gmail.com
98843 53288