கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி:கடிதத்தில் பிரதமர் நெகிழ்ச்சி

Updated : ஜூன் 01, 2020 | Added : மே 30, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
கொரோனா,போரில் வெற்றி:கடிதம், பிரதமர் நெகிழ்ச்சி

புதுடில்லி : ''நம் மக்கள் தொகையால், இங்கு கொரோனா தாக்கியபோது, இந்தியா ஒரு பிரச்னையாக மாறும் என, பலரும் அஞ்சினர். ஆனால் இன்று, உலகம் நம்மை வியந்து பார்க்கிறது. உலகின் சக்தி வாய்ந்த மற்றும் வளமான நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியர்களின் கூட்டு வலிமையும், ஆற்றலும் இணையற்றது என்பதை, நாம் நிரூபித்துள்ளோம்.

கொரோனாவுக்கு எதிரான போரில், வெற்றிப் பாதையில், இந்தியா பயணிக்கத் துவங்கியுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக, இரண்டாவது முறையாக பதவியேற்று, நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி, நாட்டு மக்களுக்கு, அனைத்து மொழிகளிலும், பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

என் சக இந்தியர்களுக்கு வணக்கம். கடந்த ஆண்டு, இதே நாளில், இந்திய ஜனநாயக வரலாற்றில், ஒரு பொன்னான அத்தியாயம் துவங்கியது, பல ஆண்டுகளுக்குப் பின், முழு பெரும்பான்மையுடன், முந்தைய ஆட்சியில் இருந்த அதே கட்சிக்கு, மக்கள் ஓட்டு போட்டனர்.


நடவடிக்கைஇந்த நேரத்தில், 130 கோடி மக்களுக்கும், நம் நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளுக்கும், மீண்டும் தலை வணங்குகிறேன்.சாதாரண நாளாக இருந்திருந்தால், நான் உங்கள் அருகில் தான் இருந்திருப்பேன். ஆனால் தற்போதைய சூழ்நிலைகள், அதை அனுமதிக்கவில்லை. அதனால் தான், இந்தக் கடிதம் வழியாக, உங்கள் ஆசீர்வாதங்களை கேட்கிறேன்.
உங்கள் பாசம், நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு தான், எனக்கு புதிய ஆற்றலையும், உத்வேகத்தையும் அளித்துள்ளன. ஜனநாயகத்தின் வலிமையை நீங்கள் வெளிப்படுத்திய விதம், முழு உலகுக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக அமைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், அரசு நிர்வாகம், ஊழலில் இருந்து, தன்னை தனியே பிரித்துக் கொண்டது; நேர்மையான நிர்வாகமாக மாறியுள்ளது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சில முக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.


துாய்மைப்பணிகள்கடந்த, 2014 முதல், 2019 வரை, இந்தியாவின் கவுரவம் உயர்ந்தது. ஏழைகளின் கண்ணியம் உறுதிப்படுத்தப்பட்டது. நாடு முழுதும், இலவச காஸ், இலவச மின்சாரம், வழங்கப்பட்டன; துாய்மைப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அனைவருக்கும் வீடு கிடைப்பதற்கான திட்டம், விரைவுபடுத்தப்பட்டது. 2016ல், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' மற்றும் 2019ல் பாகிஸ்தான் எல்லையில் விமானப்படை தாக்குதல் போன்ற, நாட்டின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.நீண்ட காலமாக கோரிக்கையில் இருந்த, 'ஒரே நாடு, ஒரே ஓய்வூதியம்; ஒரே நாடு, ஒரே வரி' திட்டங்கள், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு போன்றவை நிறைவேற்றப்பட்டன.

இந்தியாவை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காகவே, 2019-ல், நீங்கள் எனக்கு மீண்டும் ஓட்டு போட்டீர்கள். இந்தியாவை சர்வதேச தலைநகராக்க வேண்டும் என்ற உங்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், மக்களிடையே தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பின் உணர்வு ஏற்படுத்தப்பட்டது.


குழாய் மூலம் குடிநீர்பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி, ராமர் கோவில் வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒருமித்த தீர்ப்பு, இணக்கமான சூழ்நிலையை கொண்டு வந்தது.'முத்தலாக்' முறை தடை செய்யப்பட்டது. கடந்த ஓராண்டில், 9.50 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில், 72 ஆயிரம் கோடி ரூபாய், நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. 'ஜல்ஜீவன்' திட்டம் மூலம், கிராமப்புறங்களில் உள்ள, 15 கோடி வீடுகளுக்கு, குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதில், அரசு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த போது தான், கொரோனா, நாட்டை சூழ்ந்தது. நம் மக்கள் தொகையால், இங்கு கொரோனா தாக்கியபோது, இந்தியா உலகுக்கு ஒரு பிரச்னையாக மாறும் என, பலரும்
அஞ்சினர். ஆனால் இன்று, உலகம் நம்மை வியந்து பார்க்கிறது. உலகின் சக்தி வாய்ந்த மற்றும் வளமான நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியர்களின் கூட்டு வலிமையும், ஆற்றலும் இணையற்றது என்பதை, நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.


நெருக்கடிஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உடன், தொற்றுக்கு எதிராக களத்தில் நின்றவர்களுக்கு ஆதரவாக, கை தட்டி, விளக்கேற்றி, ஒற்றுமையை வெளிப்படுத்தினீர்கள். இவ்வாறான நெருக்கடி நிறைந்த ஒவ்வொரு காலகட்டத்திலும், நீங்கள் உங்களது ஒற்றுமையை நிரூபித்து வருகிறீர்கள். கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது.இந்த நெருக்கடியான காலகட்டத்தில், யாரும் அசாதாரண சூழலை எதிர்கொள்ளவில்லை எனக் கூறிவிட முடியாது. தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு, குறு தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலர், இக்காலகட்டத்தில் பெரும் துன்பத்திற்கு ஆளாகிஉள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சைக்கிளிலும், வெறும் கால்களில் நடந்தும், லாரிகளில் பயணித்தும் செல்கின்றனர். அவர்களின் கஷ்டங்களைத் தணிக்க, நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இந்த நெருக்கடி, பேரழிவாக மாறாமல், நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆறு ஆண்டு கால பயணத்தில், நீங்கள் எனக்கு அன்பும், ஆசீர்வாதமும் நிறைந்த மழையைப் பொழிந்தீர்கள். உங்கள் ஆசீர்வாதங்களின் வலிமையால் தான், கடந்த ஒரு ஆண்டில், தேசம் வரலாற்று முடிவுகளை எடுக்கவும், முன்னேறவும் முடிந்தது.
வெற்றி நம்முடையதுஇன்னும் நாம் செய்ய வேண்டியது, அதிகம் உள்ளன. இரவு, பகலாக நான் வேலை செய்கிறேன். என் செயல்பாட்டில் குறைபாடு இருக்கக்கூடும். ஆனால், நம் நாட்டிலும், மக்களிடமும், எந்த குறைபாடும் இல்லை. என் பலம், ஆதரவு நீங்கள் தான்.சர்வதேச அளவில், இது நெருக்கடியான காலகட்டம் தான். ஆனால், இந்தியாவிற்கு இது ஒரு உறுதியான தீர்வுக்கான நேரமாகும். 130 கோடி மக்களும், ஒருபோதும் தவறான பாதையில் வழி நடத்தப்பட மாட்டார்கள். நாம், முன்னேற்றத்தின் பாதையில் செல்வோம்; வெற்றி நம்முடையது தான்.இவ்வாறு, மோடி கடிதத்தில் கூறியுள்ளார்.


'வரலாற்று சாதனைகள் நிறைந்த ஆண்டு'மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளதாவது:மோடியின், இரண்டாவது ஆட்சியின் முதல் ஆண்டு, வரலாற்று சாதனைகள் நிறைந்ததாக அமைந்துள்ளது. மோடியின் தொலைநோக்கு மற்றும் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா தொடர்ந்து முன்னேறி செல்லும். கடந்த ஆறு ஆண்டுகளில், மோடி, பல வரலாற்றுத் தவறுகளை சரிசெய்தது மட்டுமல்லாமல், தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க, கடந்த, 60 ஆண்டுகளாக இருந்த வெற்றிடத்தையும் நிரப்பியுள்ளார்.நேர்மையான தலைமை மற்றும் அயராத கடின உழைப்பின் பிரதிபலிப்புகள், நாட்டு மக்கள், தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கை ஆகியவை, உலகில் அரிதாகவே காணப்படுகிறது. இவ்வாறு, அமித் ஷா கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
01-ஜூன்-202013:42:40 IST Report Abuse
Rafi திரு ராகுல்ஜி ஜனவரியிலேயே அரசுக்கு எச்சரிக்கையை கொடுத்து கொண்டிருந்தார், அதை கேட்டு முறையாக செயல் பட்டிருந்தால் இந்த அளவிற்கு விபரிதம் வந்திருக்காது. விமான நிலையங்கள் அனைத்தும் மத்திய அரசின் கீழே தான் இருக்கின்றது. அதை துண்டித்திருக்கலாம் அல்லது அங்கு பறிசோதனைகளை முறை படுத்தி இருந்தால் கொரோனா நாட்டிலேயே உள்ளே நுழைந்திருக்காது.
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
31-மே-202021:30:27 IST Report Abuse
balakrishnan True .
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
31-மே-202018:00:30 IST Report Abuse
Rajas ////கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி//// மருத்துவ துறை ஊழியர்கள், சுகாதார துறை ஊழியர்கள், கொரானா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் இந்த போரில் வெற்றி என்று ஒப்பு கொண்டால் நாமும் 100 % வெற்றி என்று ஒப்பு கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X