ஆதரவற்றோருக்கு 2,000 ரூபாய் உத்தர பிரதேச முதல்வர் உத்தரவு

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

லக்னோ; உத்தர பிரதேசத்தில், ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்ற மக்களுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.latest tamil newsஇங்கு, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 7,284 ஆக அதிகரித்துள்ளது; பலி எண்ணிக்கை, 198 ஆக உள்ளது.இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஊரடங்கு குறித்தும், மாநிலத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.


latest tamil newsஇதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநிலத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு, தலா, 2,000 ரூபாயை, நிவாரணமாக வழங்க, முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், உணவு தானியங்களைப் பெற, ரேஷன் அட்டைகள் இல்லாத மக்களுக்கு, தலா, 1,000 ரூபாய் வழங்க அறிவுறுத்தியுள்ளார்.இதன்மூலம், யாரும் பட்டினியில் தவிக்கும் நிலை ஏற்படாது. ஆதரவற்ற மக்கள் இறக்க நேர்ந்தால், அவர்களின் இறுதிச் சடங்குக்காக, 5,000 ரூபாயை நிதியுதவியாக வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஒளரங்கசிப் - Tel Aviv,இஸ்ரேல்
31-மே-202012:34:47 IST Report Abuse
ஒளரங்கசிப் அப்படியென்றால் அதை மோடிக்குதான் கொடுக்கணும் , அவருக்குத்தான் அரசியல் ஆதரவு குறைந்துக்கொண்டே வருது
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
31-மே-202013:45:50 IST Report Abuse
வாய்மையே வெல்லும்we are seeing the worst political drama of Mr Imran Khan.. he is not worth to even rule pakistan. poor people they have a foolish leader...
Rate this:
ஒளரங்கசிப் - Tel Aviv,இஸ்ரேல்
01-ஜூன்-202010:25:03 IST Report Abuse
ஒளரங்கசிப்same as modi in india...
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
31-மே-202007:56:41 IST Report Abuse
Nathan ஒதுக்கீடலுக்கு என கொடுப்பதை நிறுத்தி, ஏழைகளுக்கு கொடுக்க யூபி யோகிக்க்கே வரும். ஓட்டு மாயையை மனதில் வைக்காது தர்மத்தை எடுத்து ஆள்கிறார்.
Rate this:
Cancel
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
31-மே-202007:35:37 IST Report Abuse
Ramachandran Rajagopal தமிழ்நாடு அரசாங்கத்தை நடத்துபவர்கள் போல வாக்கு வங்கியைக் குறி வைத்து ஏழைகளுடன் மாத சம்பளம் பெறுவோர் வசதிப்படைத்தோர்களுக்கெல்லாம் சேர்த்து நிவாரணம் அளித்து கஜானாவை காலி செய்துவிடாமல் தகுதியானவர்களுக்கு மட்டுமே கூடுதலாக நிவாரணம் வழங்குவது பாராட்டுக்குரியது ஆகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X