அமெரிக்காவில் பரவுகிறது கலவரம்: போராட்டங்களை கட்டுப்படுத்த ராணுவம்

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

மின்னபொலிஸ் அமெரிக்காவில், கறுப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொன்ற, மின்னபொலிஸ் போலீஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.latest tamil news


இதற்கிடையே, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க ராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், 25ம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டு, அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணி முதல், நேற்று காலை, 6:௦௦ மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும், ஊரடங்கை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல மணி நேரமாக எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க ராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புரூக்ளினில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஹூஸ்டனில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, காரில் வந்த ஒரு மர்ம நபர், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.


latest tamil newsஇதில், 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கத்தியால் தாக்கிய பெண் சுட்டுக்கொலைபுளோரிடா மாகாணத்தின் டெம்பிள் ரெரேஸ் பகுதியில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வெளியே, ஹேபா மும்தாஜ் அலாஜாரி, 21, என்ற பெண், அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை, கத்தியால் குத்தினார். இதைக் கண்ட மற்ற போலீசார், அப்பெண்ணை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியால் குத்தியதில், போலீஸ் அதிகாரி காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shan - jammu and kashmir,இந்தியா
31-மே-202014:46:50 IST Report Abuse
shan ingu poradupavargal muludhum kanaiyakumar pondra vellaiyargal Rahul pondra JNU sendru thesa virotha thoondal garargal
Rate this:
Cancel
shan - jammu and kashmir,இந்தியா
31-மே-202014:43:04 IST Report Abuse
shan அங்கும் காங்கிரஸ் கட்சி மாதிரி ஒபாமாவின் கட்சி தேர்தல் வருவதால் எப்படி வேண்டுமானாலும் செய்வார்கள். போலீஸ் தப்பு செய்தார் அவர் மீது கொலை வழக்கு. ஏன் என்றால் போலீசும் மனிதன் தவறு நடக்கலாம். உடனே கைது இதற்க்கு இத் தனை அடாவடி செய்யும் இங்குள்ள தனி அதிகாரம் படைத்த கூட்டம் போலவே அங்கும் தூண்டி ஒட்டு வாங்க
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
31-மே-202010:34:55 IST Report Abuse
krishna Oru moorga penmani policai kathiyal kuthi irukkiral.idhudhan ivanga design. Ellam seyyakoodiya karkala sindhanai.America enbadhal angry niraya police serndhu suttu kondru vittargal.Indhiavaga irundhal indha penmani nichayam oru Congress illa DMK illa mamatha begum katchi moolam Makkal thalaiviyaga police padhu kappudan valam varuvaal.Idhudhan namadhu secularism
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X