'பாக்., அணுகுண்டு சோதனையை நவாஸ் எதிர்த்தார்'

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Nawaz, Nawaz Sharif, Pakistan, nuclear tests, Sheikh Rasheed, lahore, நவாஸ்,நவாஸ் ஷெரீப்,பாகிஸ்தான்

லாகூர்: 1998ல் இந்தியாவுக்கு பதிலடியாக பாக்., அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு அப்போதைய பிரதமர், நவாஸ் ஷெரீப் எதிர்ப்பு தெரிவித்தார் என பாக்., அமைச்சர் தெரிவித்துள்ளார்.


latest tamil news


பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 1998ல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தின் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலாக அப்துல் கலாம் இருந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனை முழு வெற்றி அடைந்தது. இதற்கிடையே, இந்தியாவுக்குப் போட்டியாக 1998 மே 28ல், சாகாய் எனும் இடத்தில் பாகிஸ்தானும் அணுகுண்டு சோதனை நடத்தியது.


latest tamil news


இந்நிலையில், பாக்., அணுகுண்டு சோதனை நடத்தியதை நவாஸ் எதிர்த்தார் என பாக்., அமைச்சர் தற்போது கூறி உள்ளார். இதுகுறித்து பாக்., ரயில்வே அமைச்சர், ஷேக் ரஷீத் கூறுகையில், 'இந்தியா, 1998ல் அணுகுண்டு சோதனை நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் ராணுவமும், அணுகுண்டு சோதனை நடத்த விரும்பியது. அதற்கு, அப்போதைய பிரதமர், நவாஸ் ஷெரீப் எதிர்ப்பு தெரிவித்தார். அதை மீறி, ராணுவம், அணுகுண்டு சோதனை நடத்தியது' என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
31-மே-202012:38:29 IST Report Abuse
Sankar Ramu பாக்கில் எப்பவுமே ராணுவ ஆட்சிதான். பிரதமர் அங்க பேட்டிக்கு மட்டும்தான்.
Rate this:
Cancel
31-மே-202008:01:13 IST Report Abuse
ஆப்பு ரெண்டு பேரும் போட்டி போட்டு அணுகுண்டு தயாரிச்சு, ஒருத்தர் அதே கேப்பில் ஜனாதிபதி ஆகி, அப்புறம் என்னென்னவோ நடந்தாச்சு.
Rate this:
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
31-மே-202005:47:48 IST Report Abuse
KumariKrishnan Bjp அணுக்குண்டு சோதனையை வாஜ்பாய் நடத்தினார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X