பொது செய்தி

இந்தியா

நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் அதிகம்

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
நிதிப் பற்றாக்குறை, அதிகரிப்பு, வரிவசூல், Fiscal deficit, GDP, india, government, economy

புதுடில்லி: நாட்டின் நிதிப் பற்றாக்குறை, கடந்த நிதியாண்டில், 4.59 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில், 2018 - 19ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.6 சதவீதமாக நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதற்கு முன், கடந்த, 2012 - 13ம் நிதியாண்டில் தான் நிதிப் பற்றாக்குறை, 4.9 சதவீதமாக அதிகரித்திருந்தது.

நிதிப் பற்றாக்குறை அதிகரித்ததற்கு அரசு கடன் வாங்கியதும், வரிவசூல் குறைந்து போனதுமே முக்கிய காரணமாகும். மேலும், வருவாய் பற்றாக்குறையும், 3.27 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் வருவாய் பற்றாக்குறை இலக்கு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின் அது மாற்றப்பட்டு, 2.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.


latest tamil news


கடந்த நிதியாண்டின் இறுதி காலகட்டத்தில், அதாவது மார்ச், 25ம் தேதியிலிருந்து, நாடு முடக்கப்பட்டதும் வரி வருவாய் குறைந்து போனதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. கடந்த நிதியாண்டில், மொத்த வருவாய், 19.31 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், 17.5 லட்சம் ரூபாயாக குறைந்துவிட்டது. அரசின் மொத்த செலவு, 26.86 லட்சம் கோடி ரூபாயாகும். இது, 26.98 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, முன்னர் கணிக்கப்பட்டிருந்தது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
31-மே-202022:17:34 IST Report Abuse
m.viswanathan நான் ஒத்துகிறேன் இது ஒரு செயலற்ற அரசு என்று
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
31-மே-202017:06:54 IST Report Abuse
kalyanasundaram CONFISCATE FROM ALL POLITICIANS,PAPOO KHAN, TAMIL NADU PAPOO AND HIS GROUPS, LIQUOR BARONS , BLACK MARKETERS THE MEDICAL PRACTITIONERS ETC ETC ILLEGALLY ACCUMULATED MONEY
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
31-மே-202015:28:23 IST Report Abuse
GMM நிதி பற்றாக்குறை: அரசு கடன் அதிகரிப்பு. வரிவசூல் குறைவு. இந்தியாவில் ஏழைகள் அதிகம். ஆனால், வரி அனைவரும் செலுத்த முடியாது. இலவசம் மூலம் நாட்டையும் மக்களையும் முன்னேற்ற முடியாது. 2G வழக்கில் கலைஞர் TV முன் பின் தெரியாதவரிடம் பல கோடி கடன் பெற்றது. கடனுக்கு வங்கியை ஏன் அணுக்கவில்லை என்று விசாரணையில் கேட்கவில்லை. நீதி, நிர்வாக குறைபாட்டில் அரசியல்வாதிகள் கறுப்பு பணம் வெளிநாட்டு முதலீடு புகுந்து விளையாடுகிறது. விளம்பரம் மூலம் வெள்ளை பணம் வரவழைக்க சிரிப்பு, அழுகை, கவலை, செய்தி, சினிமா.. போன்று 20க்கு மேற்பட்ட TV நிறுவனங்கள். 20 வயது முதல் 60 வயது வரை கல்வி, மருத்துவம் மற்றும் அரசுக்கு ஆகும் நீதிமன்ற வழக்கு விசாரணை செலவை மக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.( மோசடி வழக்கு குறையும்) அல்லது பராமரிக்க வேண்டும். வங்கி கடன் தள்ளுபடி கூடாது. இவை அந்த நபர் உயிர் வாழும் வரை பராமரிக்க வேண்டும். பாக். பிரிவினைக்கு மூல காரணம் ஒருவருக்கு ஆகும் அரசு செலவு பற்றி பராமரிப்பு இல்லாமை. மற்ற நாடுகளில் மொழி, இன பிரிவு குறைவு. இந்தியாவின் நிலைக்கு தகுந்தாற்போல் சட்டம் மாற்றுங்கள். மது, மாது, புகையிலை பழக்கம் இல்லாத நோயாளியை குணப்படுத்த டாக்டர் உற்சாகம், சந்தோசம் அடைகிறார். நோயை உடலில் வரவழைத்து மருத்துவமனை வருபவருக்கு இலவச சிகிச்சை சரியா? ஓட்டுக்கு திட்டம் வேண்டாம். நாட்டுக்கு திட்டம் போடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X