பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ நிலையங்களில் காலில் இயக்கும் மின் ஏணி

Added : மே 31, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:பயணியருக்கு கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க, மெட்ரோ ரயில் நிலையங்களில், காலால் இயங்கும் மின் ஏணிகள் பொருத்தப்பட உள்ளன.சென்னை விமான நிலையம் -- வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை -- சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்தது.ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ள இந்த ரயில் போக்குவரத்து, ஊரடங்கு முடிந்ததும், மீண்டும்இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது.ரயில்கள் இயக்கப்படும் போது,
 மெட்ரோ நிலையங்களில்  காலில் இயக்கும் மின் ஏணி

சென்னை:பயணியருக்கு கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க, மெட்ரோ ரயில் நிலையங்களில், காலால் இயங்கும் மின் ஏணிகள் பொருத்தப்பட உள்ளன.

சென்னை விமான நிலையம் -- வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை -- சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்தது.ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ள இந்த ரயில் போக்குவரத்து, ஊரடங்கு முடிந்ததும், மீண்டும்இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது.ரயில்கள் இயக்கப்படும் போது, கொரோனாதொற்று ஏற்படாமலிருக்க,நிர்வாக அலுவலகம்மற்றும் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள, மின் ஏணிகள், பயணியர் கையால் இயக்காமல், காலால் இயக்கி பயன்படுத்தும் வகையில், மாற்றி வடிவமைக்க நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.

இத்திட்டத்தில் முதல் கட்டமாக, கோயம்பேடில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலக கட்டடத்தில் உள்ள மின் ஏணி, காலால் இயக்கி பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.உரிய பாதுகாப்பு சோதனைக்கு பின், அனைத்து நிலையங்களிலும், மின் ஏணிகள், காலால் இயக்கும் வகையில், மாற்றி அமைக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
31-மே-202017:33:28 IST Report Abuse
Venkat how a physically challenged person with a wheelchair will use this.. please think about that also
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
31-மே-202010:15:05 IST Report Abuse
Girija கிராமங்களில் இருந்து வரும் இளம்தலைமுறையினர் சென்னையில் பேசுவதற்கே தயங்குகின்றனர் . சென்னையில் சிநேகிதன், ஆடுமனை (பேக்கரி) என்ற சொல்லை அவர்கள் அப்பாவியாக உபயோகிக்கும் போது நகைப்புக்கு உள்ளாகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X