பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
தமிழகம், ஊரடங்கு, தளர்வுகள், தமிழக அரசு, நீட்டிப்பு, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Tamil Nadu, lockdown extension, tn govt

சென்னை: தமிழகத்தில் இன்றுடன் முடிவடைய விருந்த ஊரடங்கு, ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழில் நிறுவனங்களில் 100 சதவீத ணியாளர்களுடன் இயங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்றுடன்( மே 31) முடிவடைகிறது. இந்நிலையில், மத்திய அரசு பல்வேறு தளர்வுகளுடன் நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்தது. இதனடிப்படையில், தமிழகத்திலும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும் தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை:
நடைமுறையில் உள்ள தடைகள்* வழிபாட்டு தலங்கள், பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்
* நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா செல்லவும் தடை* தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்கள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத்துறை, காவல்துறை, அரசு அலவலர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைபடுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு

* வணிக வளாகங்களுக்கு தடை நீடிக்கிறது* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு திறக்கக்கூடாது. இந்நிறுவனங்கள் ஆன்லைன் வழி கல்வி கற்றல் தொடரலாம். அதனை ஊக்கப்படுத்தலாம்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால், அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை நீடிக்கும்*மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் சேவை கிடையாது* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை* மாநிலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துமேற்கண்ட கட்டுப்பாடுகள், தொற்றின் தன்மைக்கு ஏற்ப படிப்படியாக தளர்வு அளிக்கப்படும்.
திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடு


* திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.


latest tamil news

சென்னை போலீஸ் துறை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில்( நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில்) 1ம் தேதி முதல் கீழ்கண்ட பணிகளுக்கு அனுமதி


* தொழில் நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் 20 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்* அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்* வணிகவளாகங்கள் தவிர்த்து அனைத்து பெரிய கடைகள் (நகை, ஜவுளி) மற்றும் ஷோரூம்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள மட்டுமே கடைக்குள் இருக்கும் பொருட்டு , தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில் ஏசி இயக்கப்படக்கூடாது.

* டீ கடைகள், உணவு விடுதிகள்( ஜூன் 7 வரை பார்சல் மட்டும்) காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படாம்.

*மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. உணவகங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்க வேண்டும். அங்கு ஏசி இயக்கக்கூடாது

*ஜூன் 8 முதல் டீ கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறது.

* அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

* வாடகை மற்றும் டாக்சி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பேருடன் இயங்கலாம்

* ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகறது. சைக்கிள் ரிக்ஷாவும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.


பொதுவான விதிமுறைகள்* குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 ன் கீழ் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடரும்
* தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.* அனைத்து, தொழில் மற்றும் வஙணக நிறுவனங்கள் தங்களதுஊழியர்கள் மற்றும் பணியாளர்களை வீட்டில் இருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

* பொது மக்கள் இ-பாஸ் அனுமதியில்லாமல், தனியார் போக்குவரத்துக்கு அரசினால், அனுமதிக்கப்பட்டாலும், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் கட்டட பணியாளர்கள், இந்நோய் தொற்றை தடுக்கும் வகையில், அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது, குறிப்பாக வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளிநபர்கள் உள்ளே பிரவேசிக்க தேவையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்


சிறப்பு மதிப்பூதியம்சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் தன்னலம் கருதாமல், அயராது களப்பணி ஆற்றி வரும் சுமார் 33 ஆயிரம் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்களின் சேவையை அங்கீகரித்து, ஊக்கப்படுத்தும் வகையில், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கம் 2,500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.


ஆயிரம் ரூபாய் நிவாரணம்சென்னையில், மாநகராட்சி பகுதியில், ஏழைகளின் வாழ்விடங்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில உள்ளது. எனவே, ஒர நோய் பரவல் தடுப்பு பணியாக சென்னை மாநகராட்சியில், குறிப்பாக சென்னை குடிசை பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக வீடுகள் மற்றும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிமைபடுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாளாவது தங்க வைத்து அவர்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய் பரவல் தடுக்கப்படும். அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் அவர்கள், முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது, தலா ஆயிரம் ரூபாய் ரொக்கம் நிவாரணம் வழங்கப்படும்.


மக்கள் ஒத்துழைப்பு தேவைஅரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம். வீட்டிலும், அலுவலகத்திலும் கட்டாயம் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியிடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசின் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.


கொரோனா பரிசோதனை


மஹாராஷ்டிரா, குஜராத், டில்லி மாநிலங்களில் இருந்து ரயலில் வருவோர் அனைவருக்கு கொரோனா பரிசோதனை அவசியம். அறிகுறி இல்லாவிடினும் சோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா இல்லாவிடினும், 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள்.

தமிகத்திற்குள் பயணித்தால், அவர்களுக்கு சோதனை தேவையில்லை. மண்டலங்களுக்கு இடையே பயணிப்போருக்கு இ - பாஸ் தேவையில்லை. அவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டும் பரிசோதனை செய்தால் போதும். அலுவல் ரீதியாக பயணம் மேற்கொண்டு 2 நாட்களில், சொந்த ஊருக்கு திரும்பி வருவோருக்கு தனிமைபடுத்துதல் தேவையில்லை.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
31-மே-202014:05:44 IST Report Abuse
Rameeparithi மருத்துவ துறை கல்லா கட்ட கட்டம் கட்டுகிறது ...
Rate this:
Cancel
S.VELMURUGAN - TIRUCHIRAPPALLI,இந்தியா
31-மே-202011:03:35 IST Report Abuse
S.VELMURUGAN Red zones ஐ தவிர்த்து மற்ற மண்டலங்களுக்கு இடையே சொந்த கார்களிலோ டாக்ஸிகளிலோ செல்பவர்கள் 1+3 என்றபடி செல்வதை அரசு தளர்த்தி இருக்கலாம். மக்களின் சுய கட்டுப்பாடே எல்லாக் கட்டுப்பாடுகளையும் விட சிறந்த கட்டுப்பாடாகும்.
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
31-மே-202010:14:59 IST Report Abuse
PR Makudeswaran எழுத்தளவில் சட்டம். நடைமுறை சாத்தியம் இல்லை. ஏனெனில் நம் மக்களில் ,மனசாட்சி உள்ளவர் மிகவும் குறைவு. அரசியல் கட்சியினர், அரசியல் அடையாளம் மற்றும் பெரும்புள்ளிகள் படம் வைத்த வாகனங்களுக்கு எந்த சட்டமும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X