பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 லட்சத்தை தாண்டியது

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
india, coronavirus_update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.82 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று (மே 30) ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,164 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே 31) காலை 10:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,763 ல் இருந்து 1,82,143 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,971 ல் இருந்து 5,164 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,370 ல் இருந்து 86,984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 89,995 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 193 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்


மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 65,168 - 2,197
தமிழகம் - 21,184 - 160
டில்லி - 18,549 - 416
குஜராத் - 16,343 - 1,007
ராஜஸ்தான் - 8,617 - 193
மத்திய பிரதேசம் - 7,891 - 343
உத்தர பிரதேசம் - 7,445 - 201
மேற்கு வங்கம்- 5,130 - 309
ஆந்திரா - 3,569 - 60
கர்நாடகா- 2,922 - 48
தெலுங்கானா - 2,499 - 77
கேரளா - 1,208 - 9

புதுச்சேரி- 51 - 0

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
01-ஜூன்-202009:18:57 IST Report Abuse
sankaran vaidyanathan புலப்படாத கிருமியின் மூலம் தொற்று நோய் பரவுகிறது இந்தியாவில் வேகமாக பரவ வில்லை ஆனால் நாளுக்கு நாள் தொற்று நோய் பாதிக்க படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகிறது. ஊரடங்கு நீட்டித்தல் மக்களுக்கான இந்தியாவை இந்தியாவிற்கான மக்கள் தேவை என்கிறார்கள் இப்பொழுது . நிபுணர்கள் கூறுகிறார்கள் தொற்று நோய் பரவல் குறைந்து கொண்டு வருகிறது என்று . பரவல் எப்படி ஏற்படுகின்றது கூர்ந்து ஆராய்ந்து நிகழ்வை கண்டறிந்து அதற்கேற்ப அறிவுரையாக இல்லையே . ஆரோக்கிய வாழ்விற்கு உடற் பயிற்சியும் காலை மலை நல்ல காற்றோட்டமுள்ள மரங்கள் நிறைந்த பூங்காக்களில் நடை பயிற்ச்சியும் அவசியம் அத்தியாவசியம் என்பது வழக்கு ஊரடங்கால் என்ன நன்மை ஏற்பட்டது நோய் தொற்று அதிகரிப்பதை தவிர பட்ட காலிலேயே படும் கேட்ட குடியே கெடும் என்கிற சொல்லுக்கு சான்றாக வேலை இல்லை வருமானம் இல்லை வெளியே செல்வதற்கு உரிமை இல்லை உண்ண உணவில்லை தங்க இடம் இல்லை அரசின் செய்கையால் வசதி உள்ளவர்கள் வாழுங்கள் வசதி அற்றவர்கள் அவதி படுங்கள் நாட்டை தொற்று நோயில் இருந்து காப்பாறுகிறோம் மக்கள் நாட்டின் வளம் இயற்கை அளிக்கும் ஆரோக்கியம் இவைகளை பற்றி கவலை இல்லை என்பதாக அமைகிறது அமைச்சு கூற்று
Rate this:
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
31-மே-202019:08:47 IST Report Abuse
sekar ng சீனாவை விட இந்தியாவில் சீன வைரஸ் சாவு அதிகமாய் உள்ளது. தொற்றை பரப்பி விட்டு சீனா ஹாயாக ஊரடங்கை நீக்கி தொழிலை ஆரம்பித்து விட்டது
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
31-மே-202018:18:12 IST Report Abuse
Endrum Indian மூவாயிரம் நாலாயிரம் ஆகி ஐந்தாயிரம் ஆகி ஆறாயிரம் ஆகி ஏழாயிரம் ஆகி இப்போ எட்டாயிரம் ஆகி வெறும் 7 நாளில்???ஓ நாராயணா நீ நல்லவனாக மாறு இவ்வளவு மோசமாக இருக்காதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X