யூதர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் ஏஞ்சலா அரசு; ஜெர்மனி மக்கள் வரவேற்பு

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Germany, Reintroduce, Military, Rabbis, German Military, anti-semitism, யூதர்கள், சமவாய்ப்பு, ஏஞ்சலா, ஜெர்மனி

பெர்லின்: 1930ம் ஆண்டுக்கு முன்னர் செயல்பட்ட யூதர்கள் அடங்கிய ராணுவப்படை ராபி படை என அழைக்கப்படும். இது ஹிட்லர் காலத்தில் அடியோடு அழிக்கப்பட்டது. தற்போது 1957ம் ஆண்டு ராபிக்கள் சட்டத்தை தூசு தட்டி எடுத்த ஜெர்மனி உச்சநீதிமன்றம் ராபிக்கள் படையை மீண்டும் ஜெர்மனி ராணுவத்தில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது. இது யூதர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கடந்த 10 நாட்களாக ஜெர்மன் பாராளுமன்றத்தில் இந்த முடிவு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜெர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்ராம்ப் கரென்போர் கூறுகையில், யூதர்களுக்கு எதிரான அரசியலையும் காழ்ப்புணர்ச்சியையும் ஜெர்மனி நாட்டில் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முதல் உலகப்போரில் ஜெர்மனி சார்பாக ஒரு லட்சம் யூதர்கள் பங்கேற்று நாட்டுக்காகப் போராடினர். 1933ம் ஆண்டு ஹிட்லர் பதவி ஏற்றபின்னர், அவரது நாஜி கட்சி யூதர்களை ஜெர்மனி அரசு வேலைகளில் இருந்து படிப்படியாக நீக்கியது. அப்போது ராபி படை தடை செய்யப்பட்டது. பின்னர் யூதர்கள் ஹிட்லர் ஆட்சி காலத்தில் துயரங்களை அனுபவித்தது வரலாறு.


latest tamil news


யூதர்களுக்கு எதிரான வன்முறை போக்கை மாற்றி அமைக்க தற்போதைய ஏஞ்சலா மெர்கலின் கிருஸ்தவ ஜனநாயக யூனியன் அரசு போராடி வருகிறது. 1998 முதல் கிருஸ்துவ ஜனநாயக கட்சியும், சோசியல் ஜனநாயக கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. தவிர மத சார்பற்ற சிறு கட்சிகளும் அங்கு உண்டு.

2005ம் ஆண்டு தொடங்கி ஜெர்மனி சான்சிலராகவும் ஐரோப்பிய யூனியன் தலைவராகவும் உள்ள ஏஞ்சலா, ஜெர்மன் அரசு பணிகளில் இனப்பாகுபாட்டை ஒழித்து கிருஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் சம உரிமை அளிக்க முற்பட்டு வருகிறார். உலகின் சக்தி வாய்ந்த பெண் தலைவர்களுள் ஒருவரான ஏஞ்சலாவின் இந்த முயற்சி ஐரோப்பிய தலைவர்கள் பலரால் வரவேற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


கடந்த 2019ம் ஆண்டு 49 ஜெர்மன் ராணுவ பணியாளர்கள் இனப்பாகுபாடு மற்றும் வன்முறையில் ஈடுபட்டதால் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் 46 பேர் வலதுசாரி ஆதரவாளர்கள். இருவர் இஸ்லாமிய ஆதரவாளர்கள், ஒருவர் இடதுசாரி ஆதரவாளர். இவர்கள் சார்ந்திருக்கும் இயக்கம் மற்றும் அதன் கொள்கை காரணமாக எதிர் கொள்கை கொண்டவர்களை தாக்குவது, அதிகார துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசு பணி செய்துகொண்டு இது போல செயல்படுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏஞ்சலா அரசு முற்பட்டு வருகிறது.


latest tamil news


ராபி படை யூத வீரர்கள் வெளிநாட்டு பயணங்களின்போது ஜெர்மன் ராணுவத்துக்கு பக்கபலமாக விளங்குவர் என் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஸ்தவ மத கொள்கைகள் மூலமாக வீரர்களை வழிநடத்த உதவுவர். புதிதாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் தற்காலிகமாக இவர்களுக்கு இதுபோன்ற சிறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இன்னும் ஆறு ஆண்டுகாலத்துக்கு பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பின்னர் இவர்களது பணி ஆளுமையைப் பொறுத்து பணி நிரந்தர முடிவு எடுக்கப்படும் என ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. ஹாம்பர்க், முனீச், ஃப்ராங்பர்ட், லேப்சிக் நகர பணிகளில் இவர்கள் முதற்கட்டமாகப் பணியமர்த்தப்படுகின்றனர். ஃபெடரல் சீஃப் இவர்களுக்குத் தலைமை வகிப்பார்.

ஜெர்மனி ராணுவத்தில் அதிக இடத்தை கிருஸ்துவ மதப் பிரிவான ப்ராடஸ்டண்ட் (53 ஆயிரம் வீரர்கள்) மற்றும் ரோமன் கேத்தலிக் (41 ஆயிரம் வீரர்கள்) ஆகிய பிரிகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளது. இவர்களை அடுத்து சிறுபான்மை வீரர்களான 3 ஆயிரம் இஸ்லாமிய வீரர்களும் 300 யூத வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். தற்போது அரசு பணிகளில் யூதர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன்மூலமாக ஒரு காலத்தில் யூத மக்கள் ஜெர்மனியில் அனுபவித்த கொடுமைகளுக்கு ஜெர்மனி பிராயர்ச்சித்தம் தேடி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Muthuraj - Sivakasi,இந்தியா
31-மே-202018:25:49 IST Report Abuse
K.Muthuraj இந்தியர்கள் அடிமைத்தனத்தில் உரியவர்கள். அந்தமான் சிறையை பார்க்கும் போது கோபம் வராது. புல்லரித்து போவார்கள்.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
31-மே-202016:55:32 IST Report Abuse
Nathan யூதர்களை படுத்திய பாடு, நெரு கான் தொடங்கி சூனிய பாய் வரை ஹிந்துக்களை குறிவைத்து படுத்துவது இன்னும் தொடர்கிறது..சக்கரம் எப்போதும் ஒரு ஆரத்தையே உயரே வைக்காது.
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
31-மே-202015:44:52 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா கொத்து கொத்தாக யூதர்கள் கொல்லப்பட்ட ஆஷுவிட்ச வரலாறு தெரிஞ்ச நமக்கு, அதை விட பலமடங்கு அந்தமான் சிறையில் நடந்த கொடூரத்தை தெரியாது. வீர சாவர்க்கர் நேதாஜி போன்றோர் வரலாற்றை மறைத்து வெறும் காந்தி மட்டுமே சுதந்திரம் வாங்கினார் என்று தான் நேரு குடும்பம் வரலாற்றை எழுதி சம்மதமே இல்லாமல் காந்தி பேரை நேரு குடும்பம் வைத்துக்கொண்டு விட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X