பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் எவை,எவை செயல்படலாம்?

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு ஜூன் 1 முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அதன் விவரம்: * தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு
சென்னை, தமிழக அரசு, ஊரடங்கு,  கொரோனா, கொரோனாவைரஸ், Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Tamil Nadu govt, lockdown norms, Chennai

சென்னை: தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு ஜூன் 1 முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


அதன் விவரம்:


* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்கவிக்க வேண்டும்

* வணிகவளாகங்கள் தவிர்த்து அனைத்து பெரிய கடைகள் (நகை, ஜவுளி) மற்றும் ஷோரூம்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில் ஏசி இயக்கப்படக்கூடாது.

* மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. உணவங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்க வேண்டும். அங்கு ஏசி இயக்கக்கூடாது.


latest tamil news* டீக்கடைகள், உணவு விடுதிகள்( ஜூன் 7 வரை பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.

* மத்திய அரசு உத்தரவுப்படி ஜூன் 8 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 சதவீதம் அளவு மட்டும் வாடிக்கையாளர் அமர்ந்து தேநீர் அருந்தலாம்.

* வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டுமே மண்டலத்தற்குள் இ பாஸ் இன்றி பயன்படுத்தலாம்,

* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது,

* சலூன்கள் மற்றும்அழகுநிலையங்களில் ஏசியை பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jai Ganesh - Chennai,இந்தியா
31-மே-202018:01:35 IST Report Abuse
Jai Ganesh are you serious ? how is this possible? public gathering banned ? but allowing restaurants and shopping complex and tea shops and gyms,do you think public not gather here?buses are banned in Chennai but pvt and it companies are allowed to work,then how peoples can travel? i thing tn government playing with peoples life,why tasmac banned in chennai? allow that too,its not the lock down its make you fool-down, and you are playing with virus in the name of stupid governance ,simply say the government racing with no one hotpot city in India ,all the best for the genius government, its all out fate
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
31-மே-202014:39:38 IST Report Abuse
Panneerselvam Chinnasamy சீனா கொரியா போன்ற நாடுகள் முற்றிலும் நோய் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தபின் தளர்த்தினார்கள். கனடா போன்ற நாடுகள் நோய் இறங்கிவந்தபின் அந்தந்த பகுதிகளில் படிப்படியாக தளர்த்தினார்கள். நாம் நோய் ஏறுமுகத்தில் இருக்கும்போதே தளர்த்துகிறோம். சரியாக்கப்படவில்லை. சரி மருத்துவமனைகளில் தகுந்தளவு படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் தாயாராக வைத்திருக்கிறோமா? நோய் தோற்று இனி மூன்று நாட்களில் இரட்டிப்பாகும் அபாயம் உள்ளது. அரசு உசாராக இருக்க வேண்டும். கொள்ளை நோய் விஷயத்தில் அசட்டையாய் இருந்தால் அமெரிக்கா,இத்தாலி கதி போல் ஆகிவிடும்
Rate this:
Cancel
31-மே-202014:35:08 IST Report Abuse
RAVICHANDRAN எவை எவை செயல்படலாம் என்பதை விட கூடாதவை சுடலை, குருமா, ஓசி சோறு, மற்றும் அவர்களது கோஷ்டிகள்
Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
31-மே-202018:58:56 IST Report Abuse
வந்தியதேவன்ஆனா.... “கொரோனா”..வை ஆண்டவன் அனுப்பி வைத்து... “வச்சி செஞ்ச” பிறகும்... இது மாதிரி கமெண்ட் போடுறீங்க...? இன்னும் திருந்துற மாதிரி தெரியல.......
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்கொரோனாவை அனுப்பியதே ஆண்டவன் என்று சொல்லும் உங்கள் த்ராவிஷ மூளையை நினைக்கையில் சிரிப்பை அடக்க முடியவில்லை. உங்களை போன்றவர்கள் திருந்தப்போவது எப்போதோ???...
Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
04-ஜூன்-202013:08:11 IST Report Abuse
வந்தியதேவன்ஆண்டவன் துணிலும் இருப்பார்.. துரும்பிலும் இருப்பார்...னு சொல்றீங்க? அப்ப... வைரஸ் ஆன கொரோனாவில் இல்லையா...? என்னய்யா உங்க தத்துவங்கள்? சரி அய்யா... நீங்க சொல்ற பிரகாரம் சீனாகாரனோ, பாகிஸ்தான் காரனோ அனுப்பி வச்சான்னே வச்சிக்கோவோம்..சீனாகாரனுக்கும் ஆண்டவன்...னு ஒருத்தன் இருக்கணுமில்ல.. உங்களுக்கு ஒரு சாமி இருந்ததுன்னா... அவங்களுக்கும் ஒரு சாமி இருக்கோணமில்ல... அந்த ஆண்வடனைத்தான், சாமியைத்தான் சொன்னேன்.. என்னோட கேள்வியே... “தூணிலும், துரும்பிலும் இருப்பவன்... ஏன் கொரோனாவில் இருக்கமாட்டான்”...?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X