பொது செய்தி

இந்தியா

வெட்டுக்கிளி பிரச்னையிலிருந்து விவசாயிகளை காக்க புது உத்தி: பிரதமர்

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
வெட்டுக்கிளி, பிரதமர்மோடி, மோடி, பிரதமர் நரேந்திர மோடி, நரேந்திர மோடி, விவசாயிகள், ஏழைகள், PM Modi, states, locust attack, new strategy, narendra modi, indian states

புதுடில்லி: நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும். இதற்காக புது உத்திகள் கையாளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மன்கி பாத் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் அவர்களின் நலனுக்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவங்கப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயனடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியை தொட்டுள்ளது. இந்த திட்டம் ஏழைகளுக்கு பணத்தை மிச்சப்படுத்தியுள்ளது.


latest tamil newsயோகா மூலம் சுவாச பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் முயன்று வருகின்றனர். பிராணயாமம் உள்ளிட்ட சில பயிற்சிகள் நமக்கு மிகச்சிறந்த தீர்வை அளிக்கும்.இந்தியா தனது சுய சக்தியில் செயல்படும போது பல்வேறு பரச்னைகள் தீர்க்கப்படும். யோகா, ஆயுர்வேதம் கொரோனாவுக்கு எதிராக எப்படி பயன்படுத்தலாம் என உலக தலைவர்கள் என்னிடம் கேட்டனர். யோகா, ஆயுர்வேதத்தை மக்கள் தினசரி எடுத்து கொள்வதை பார்க்க முடிகிறது.வடகிழக்கு மக்களின் துயரங்களை தீர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாட்டின் கிழக்கு பகுதிகள் இயற்கையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் வெட்டுக்கிளிகளால் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களுக்கு தேவையான உதவி செய்யப்படும். சிறிய உயிரினம் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இது எடுத்து காட்டுகிறது. இந்த தாக்குதல் இன்னும் சில நாட்கள் நீடித்து, அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை காக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள் மற்றும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
31-மே-202020:21:06 IST Report Abuse
Natarajan Ramanathan இங்க ஒரு வெத்துக்கிளி ....
Rate this:
Cancel
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
31-மே-202020:17:27 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் மத நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கையை பரப்புவார்கள்.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
31-மே-202020:12:58 IST Report Abuse
அன்பு வயல்களை கொளுத்திவிட்டால், தின்பதற்கு ஏதுமின்றி வெட்டுக்கிளிகள் எல்லாம் செத்துவிடும் என்று மோடி அதிரடி திட்டம் வைத்துள்ளார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X