கொரோனாவால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
CoronaVirus, Thane, corona Test, Positive cases, new corona cases, corona outbreak, corona update, corona news, corona cases, corona patients, corona spread, COVID-19, corona Patient Funeral, Maharashtra, thane, bmc, corona in maha, india, கொரோனா, வைரஸ், தானே, இறந்தவர், இறுதிசடங்கு, கோவிட்-19

மும்பை: மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற, 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் தானே அடுத்த உல்ஹாஸ்நகர் என்ற பகுதியை சேர்ந்த 40 வயது பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறந்ததற்கு பின் அப்பெண்ணிற்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அப்பெண்ணின் இறுதிச்சடங்கில் தடையை மீறி 70 பேர் வரை பங்கேற்றுள்ளனர். மே 25ம் தேதி பெண்ணின் உடலை வெளியே எடுக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அதிகாரிகள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இறுதி சடங்கு செய்வதற்காக இறந்த பெண்ணில் உடலை பையில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.


latest tamil news


தகவல் அறிந்த போலீசார் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து இறுதிசடங்கில் பங்கேற்ற நெருங்கிய உறவினர்கள் உட்பட 70 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று நோய் சட்டத்தினை மீறியதற்காக இறந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று இம்மாத துவக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதான நோயாளி ஒருவர் மரணமடைந்தார். உடலை திறந்து இறுதிச்சடங்கு செய்ததால் 20 பேருக்கு தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
31-மே-202021:27:37 IST Report Abuse
Natarajan Ramanathan கொரானாவில் இறந்தவர்களின் உடலில் முகத்தை மட்டும் நல்ல தரமான பிளாஸ்டிக் கவர்கொண்டுமூடி சீல்வைத்து வழங்கவும்
Rate this:
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
31-மே-202020:14:20 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Cremation is the best option.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-மே-202020:09:19 IST Report Abuse
தமிழ்வேல் 2 போலீஸ் பாதுகாப்புடன் செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X