‛பிஸி சாக்ஷி| Dinamalar

‛பிஸி' சாக்ஷி

Added : மே 31, 2020
இன்ஸ்டா கிராமில் கிளாமர் போட்டோ ஷூட், பிட்நஸ் வீடியோ என எப்போதும் 'பிஸி பியூட்டி'யாக இளசுகளின் மனதை அள்ளும் நடிகை சாக்ஷி அகர்வால் மனம் திறக்கிறார்...கொரோனா ஊரடங்கு எப்படி போகுது...உடற்பயிற்சி, சினிமா, சமையல் பண்றேன். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது வாட்ஸ்ஆப், நாளிதழ், டிவி கிடையாது... அதை ஒப்பிடும் போது ஊரடங்கு ஈஸியாக தான் இருக்கு.நீங்க எப்படி சினிமாவுக்கு
சாக்ஷி அகர்வால், காலா,விஸ்வாசம், பேட்டி

இன்ஸ்டா கிராமில் கிளாமர் போட்டோ ஷூட், பிட்நஸ் வீடியோ என எப்போதும் 'பிஸி பியூட்டி'யாக இளசுகளின் மனதை அள்ளும் நடிகை சாக்ஷி அகர்வால் மனம் திறக்கிறார்...


கொரோனா ஊரடங்கு எப்படி போகுது...

உடற்பயிற்சி, சினிமா, சமையல் பண்றேன். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது வாட்ஸ்ஆப், நாளிதழ், டிவி கிடையாது... அதை ஒப்பிடும் போது ஊரடங்கு ஈஸியாக தான் இருக்கு.


நீங்க எப்படி சினிமாவுக்கு வந்தீங்க

குடும்பத்தில் யாரும் சினிமாவில் இல்லை. தனியார் கம்பெனியில் மேனேஜரா இருந்தேன். ஒரே வேலை பார்க்க போரடித்து மாடலிங் பண்ணினேன். அப்படியே சினிமாவுக்கு வந்தேன்.


காதல் என்றால்...

அமெரிக்காவில் இருந்தாலும், சென்னையில இருந்து காதலிச்சாலும் அது உண்மை காதலா இருக்கனும். நான் அரேஞ்ச் வித் லவ் மேரேஜ் தான் பண்ணுவேன்.



* சினிமாக்களில் நடிக்கும் போதே பிக்பாஸ்

பிக் பாஸ்க்கு முன் 'காலா', விஸ்வாசம்', 'சிண்ட்ரல்லா', 'ஆயிரம் ஜென்மங்கள்' படங்களில் நடித்தேன். நம்மள பத்தி நாமளே தெரிஞ்சுக்கலாம்னு தான் பிக்பாஸ் போனேன். படங்களில் நடிச்சாலும் , டிவி சேனல் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் போற மாதிரி நினைச்சேன்.


'ராஜா ராணி' படத்தில் ஒரு காட்சியில்

பெங்களூரில் மாடலிங் பண்ணிட்டு இருந்த போது வாய்ப்பு வந்தது. என்ன சீன் , என்ன கேரக்டர்னு கேட்காமலே வந்து நடிச்சு கொடுத்துட்டு போயிட்டேன்.



'காலா' ரஜினி, 'விஸ்வாசம்' அஜித்

ரஜினி கூட படப்பிடிப்பில் இருக்கும் போது உடம்பெல்லாம் நடுங்கிருச்சு. ஆனால், அவர் எளிமையாக நடந்துகிட்டார். அஜித், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். 'வாங்க உட்காருங்க ஜி, டீ சாப்பிடுறீங்களா சார்னு' கேட்பார். நிறைய பேருக்கு அவர் கையால் சமைச்சு கொடுப்பார். இவங்க ரெண்டு பேரு கூட நடிச்சது பெரிய அனுபவம்



சினிமாவில் புதுமுகங்கள் அதிகம்...

சினிமாவில் நடிக்க, சாதிக்க பொறுமை வேணும். உங்களுக்கு திறமை இருக்குன்னு தெரிஞ்சா ஒரு நாள் வெளியில் கொண்டு வருவாங்க. ஒரு படம் ஹிட் ஆச்சுன்னா, அடுத்த படம் பிளாப் ஆகலாம்... இதை ஏற்கும் மனநிலை வேண்டும்



கிளாமரா பாவாடை தாவணியில் போட்டோ

நான் சரியான முறையில் பராமரிக்கிற உடம்பை காட்டுறது தப்பில்லைனு நினைக்கிறேன். அது ஒண்ணும் பெரிய ஆபாசமும் இல்லை.



நீங்கள் நடித்த 'சிண்ட்ரல்லா' படத்தில் கேரக்டர்

'சிண்ட்ரல்லா' பேண்டஸி திரில்லர் படம்... எனக்கு வில்லி கேரக்டர் என்று சொல்லலாம். முதல் முறை இந்த மாதிரி கேரக்டர் பண்றேன். இந்த படம் எல்லோருக்கும் பிடித்த படமா இருக்கும்னு நினைக்கிறேன். அடுத்து ஆர்யா கூட 'டெடி' படத்தில் நடிக்கிறேன்.
கவி

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X