பொது செய்தி

இந்தியா

பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
மத்தியஅமைச்சரவை, செயலாளர், சென்னைஐஐடி, கோபாலகிருஷ்ணன், நியமனம், ஐஏஎஸ், பிரதமர்மோடி,  S Gopalakrishnan, PMO, additional secretary, Appointments Committee of the Cabinet, Prime Minister's Office, IAS officer, ACC, Tamil Nadu cadre IAS officer

புதுடில்லி: பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக தமிழகத்தை சேர்ந்தவரும், சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவருமான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையில் நடந்த நியமன குழு அளித்துள்ளது. 1991ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பேட்ஜ் அதிகாரியான அவர் தற்போது, தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் செயலாளராக உள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.,யில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்த அவர், பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம்., மில் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். டெவலெட்மென்ட் ஸ்டடிஸ் தொடர்பாக நெதர்லாந்தின் ரோட்டார்டேமில் உள்ள எஸ்ராமஸ் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார்.


latest tamil newsஅமைச்சரவை நியமன குழுவானது, பீஹார் கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை, இணை செயலாளராகவும், ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீரா மொகந்தியை பிரதமர் அலுவலகத்தின் இயக்குநராகவும் நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

2001ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான ஸ்ரீதர், விவசாயத்துறையில் பட்டமேற்படிப்பு பெற்றுள்ளார். மேலும் மரபியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். தற்போது, முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகடமியில் மூத்த இணை இயக்குநராக பதவி வகித்து வருகிறார். மீரா மொகந்தி, அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றி வருகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் அப்புறம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
31-மே-202018:28:44 IST Report Abuse
Endrum Indian இவ்வளவு விவரமாக அவர்கள் படிப்பு உள்ளது அவர்கள் இப்போது அரசு அலுவலகத்தில் மிக உயரிய பதவியை வகிக்கின்றனர். இதுவே நாம் குழந்தைகள் சரியாக படிக்காவிட்டால் என்ன சொல்லி திட்டுவோம் "டேய் நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு". இப்பொழுது அந்த பழமொழி மாறி விட்டது "சரியாக படிக்கலைனா நீ ஒரு பெரியார் ஆகலாம் இல்லை முதன் மந்திரி ஆகலாம் டாஸ்மாக் நாட்டில் இல்லை பிஹாரில்" "நல்ல படிச்சேன்னா சுத்தமா படிக்காதவன் கீழே நீ செக்ரெட்டரி ஆகலாம்" இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும். இப்போ முடிவு பண்ணிக்கோ எங்கே நீ இருக்கணும்னு அதுக்குத்தகுந்த மாதிரி படி .
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
31-மே-202017:54:12 IST Report Abuse
PR Makudeswaran எப்படி மு.க. எம்.ஜி.ஆர் ஜெ. முதல்வர் ஆனார்கள்? அவர்களின் நல்ல நேரமா இல்லையேல் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X