பொது செய்தி

தமிழ்நாடு

திருடப்பட்ட பைக் கூரியரில் வந்த ஆச்சரியம்

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
பைக், திருட்டு, கூரியர், கோவை, சூலூர், thief, courier, TN news, Tamil Nadu, coimbatore, coimbatore news, sulur, bike, two-wheeler, suresh,

கோவை: சூலூரில் திருடு போன பைக், கூரியரில் வந்த சம்பவம் உரிமையாளருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார், 34. இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சுரேஷ் தனது பைக்கை கம்பெனி முன்பு நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது தனது பைக் காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவை சோதனை செய்து பார்த்தார். அதில் வாலிபர் ஒருவர் பைக்கை ஓட்டிச் சென்றது பதிவாகி இருந்தது. இதனால் தனது பைக் திருடப்பட்டதை உறுதிப்படுத்திய சுரேஷ், அந்த நபர் குறித்து விசாரித்துள்ளார்.


latest tamil news


அப்போது பைக்கை திருடிச்சென்ற மர்ம நபர் அப்பகுதியில் டீ மாஸ்டராக இருந்தது தெரியவந்தது. ஆனால் அவரைப் பற்றிய வேறு எந்த தகவல்களும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று (மே 30) சூலூர் கூரியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், அவரது பெயருக்கு கூரியர் வந்துள்ளதாக கூறியதால், அங்கு சென்று பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. திருடுபோன தனது பைக் கூரியரில் வந்ததால் ஆச்சரியமடைந்த சுரேஷ், கூரியர் கட்டணத்தை செலுத்தி தனது பைக்கை எடுத்து வந்தார். திருடு போன பைக், கூரியரில் வந்த சம்பவம் சுரேஷிற்கு அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் தந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
03-ஜூன்-202015:23:12 IST Report Abuse
PR Makudeswaran பெயர் உள்ளது தான். மனதும் எண்ணமும் சுத்தமாக இருந்தால் எல்லாமே விளங்கும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-ஜூன்-202007:49:51 IST Report Abuse
skv srinivasankrishnaveni யு ஆர் வெரி லக்கிசார் வந்துதான் என்ஜாய் போன்றவைகள் கிடைக்காது கிடைச்சாலும்பல பார்ட்ஸ் காணாமல்போயிடும் எனக்கு காலம்போனவைகள் எதுவும் கிடைக்கவேயில்லீங்க கல்லம்போயி 30வருசம் ஆயாச்சு ஒன்னும் செய்யமுடியாது வேண்டாம் இனி நகைகள் என்று மஞ்சள் சரதுலே தாலியும் கழுத்துல கருக்குமணிமாலையும்தான் என் ஆபரணம் ஒன்னும்குறைஞ்சுபோகலே அடுத்தவனுக்கு பெருமாள் தக்க தண்டனை தந்துருவார் என்று நம்பறேன் இருந்தபோதும் போட்டுண்டு மகிழவேயில்லே இப்போது இல்லே என்னும்போது கவலைப்பட்டு நோ யூஸ் இந்த மனப்பக்குவம் வரதுக்கு ரொம்பவேக்காளம் ஆயிட்டது அதுவரை கள்ளம் பண்ணவன்கைகள் விளங்காமபோகணும் சோறுத்தின்னா கழுவக்கூட கைகளே இல்லாமல் தவிக்கவேண்டும் என்று சபிச்சுருக்கேன் . போனதுகிடைத்தால்luck
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
31-மே-202022:44:05 IST Report Abuse
Vena Suna கொரோனாவை கலந்து பைக்கை அனுப்பி இருப்பான் தன்னை கண்டு பிடித்து விட்டான் என்று ..உஷார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X