பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 22,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 1,149 பேர் பாதிப்பு

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Tamilnadu, CoronaCases, DeathToll, Discharge, தமிழகம், கொரோனா, பாதிப்பு, உயிரிழப்பு, பலி, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 31) புதிய உச்சமாக ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆகவும், 173 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 95 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 22,333 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 12,807 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 10 பேரும், மதுரை, காஞ்சிபுரம் மற்றும் நாமக்கலில் தலா ஒருவர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



இன்று ஒரே நாளில் 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 12,757 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,400 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,286 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 18,995 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 2,052 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
01-ஜூன்-202019:21:56 IST Report Abuse
Tamilnesan அரசு ஒரு பக்கம் யாரும் வெளியில் வராதீர்கள் என்று சொல்கிறது. மறுபக்கம் டாஸ்மாக் கடையை திறந்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. டாஸ்மாக் கடை திறக்க திமுக அழுத்தம் கொடுத்துள்ளது, ஏனெனில், தமிழ் நாட்டில் உள்ள மொத்த மதுபான ஆலைகளின் உரிமையாளர்கள் திமுகவை சேர்ந்தவர்கள். டாஸ்மாக் திறக்காவிட்டால், தயாரித்த மதுவை எங்கே கொட்டுவார்கள், நஷ்டம் வேறு, தேர்தல் வருகிறது, வாக்காளர்களுக்கு எப்படி பணம் கொடுத்து வெற்றி பெறுவது. இப்படி பல பிரச்சனைகள் இருக்க மனித உயிர்கள் எம்மாத்திரம், அவர்களுக்கு வேண்டியது ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும், அவ்வளவே, இது தெரியாமல் தமிழக மக்கள் பல வருடங்களாக மாறி மாறி வோட்டளித்து ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள். வாழ்க தமிழக மக்கள். வளர்க அவர்கள் அறியாமை.
Rate this:
Cancel
Vijay - Chennai,இந்தியா
01-ஜூன்-202012:42:16 IST Report Abuse
Vijay பின் கட்டுப்பாடு இல்லாமல் ஊர் சுற்றினால் கொரோனா வராதா?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
01-ஜூன்-202012:35:47 IST Report Abuse
Girija tholai kaatchigalil koronaa vilipunarvu engria peyaril thambi ramaiyaavin mattarganamana nigalchiyai oliparapugirndranr uedane thadai seiyya vendum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X