ராகுலுக்கு எதிராக சதி

Added : மே 31, 2020
Share
Advertisement
 ராகுலுக்கு எதிராக சதி

ராகுலுக்கு எதிராக சதி

காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ராகுல் மீண்டும் வர வேண்டும் என, சோனியா உட்பட பலர் விரும்புகின்றனர். ராகுலோ, அதற்கு பதில் சொல்லாமல், காலம் தள்ளி வருகிறார். ஆனால், சீனியர் தலைவர்கள் சிலர், 'ராகுல் தலைவராகக் கூடாது; சோனியாவே அந்த பதவியில் நீடிக்க வேண்டும்' என்கின்றனர்.ராகுலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறவர், ஒரு சீனியர் தலைவர். முன்னாள் அமைச்சரான இவர், வழக்கறிஞர் தொழிலில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். ராகுலுக்கு எதிரான குழுவின் தலைவர் இவர் தான்.ஊடகங்களில், ராகுலுக்கு எதிராக செய்தி வர வேண்டும் என்பதற்காக, தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களை அழைத்து, 'ராகுல் எதுவும் தெரியாமல், சகட்டு மேனிக்கு அறிக்கைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்; அவர் ஒரு முட்டாள்; அவர் கட்சி தலைவரானால் உருப்பட்ட மாதிரி தான்' என, சொல்லி வருகிறார்.
சோனியாவிற்கு நெருக்கமான நான்கு தலைவர்கள், இந்த முன்னாள் அமைச்சருடன் கை கோர்த்துள்ளனர். இந்தக் குழுவின் பணத் தேவைகளையும், அந்த முன்னாள் அமைச்சர் கவனித்துக் கொள்கிறார்.இதற்கிடையே, ராகுல் தனக்கு ஆலோசனை வழங்க, ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தனக்கு நெருக்கமான, அதே நேரம், கட்சியில் யார் என்றே தெரியாத சிலரை நியமித்துள்ளார் ராகுல். இவர்கள் எல்லாம், முக்கிய புள்ளி விபரங்களை அலசி ராகுலுக்கு ஆலோசனை தருவராம்.
இந்தக் குழுவில், அந்த முன்னாள் அமைச்சர் மற்றும் வயதான தலைவர்களை ராகுல் சேர்க்கவில்லை. இதனால் தான், அந்த கோஷ்டி, ராகுலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்கின்றனர், விஷயம்தெரிந்தவர்கள்.


தமிழக தேர்தலுக்கு ஆயத்தம்



அமெரிக்கா சென்று, ஊரடங்கால் இந்தியா திரும்ப முடியாமல், அங்கேயே சிக்கிக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சமீபத்தில் நாடு திரும்பி விட்டார். இப்போது, அவர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் சில நாட்களில், அலுவலகம் வர ஆரம்பித்து விடுவார்.நவம்பர் மாதம், பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும். இதையடுத்து, அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகியவற்றுக்கான சட்டசபை தேர்தல்களை நடத்த வேண்டும்.கொரோனா பரவலால், இந்த தேர்தல்கள் தள்ளிப் போகலாம் என, செய்திகள் அடிபட்டன. ஆனால், அதை பொய் என நிரூபிக்கும் வகையில், தலைமை தேர்தல் ஆணையம், அடுத்த வாரம் இதற்கான வேலைகளை துவக்க உள்ளது. மூன்று தேர்தல் ஆணையர்களும், இந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளோடு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகத்தில், அடுத்த மாதம் முதல் வாரத்தில், தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்த உள்ளனர். குறிப்பாக, ஓட்டுக்கு பணம் தருவதை எப்படி தடுப்பது; சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்துவது என, பல விஷயங்களை அலசி ஆராய உள்ளனர். இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகளோடும், ஆணையம் ஆலோசனை நடத்தும்.வரும் டிசம்பர் மாதத்திற்குள், தமிழக தேர்தல் ஏற்பாடுகளை முடிக்க வேண்டும் என்பது, தேர்தல் ஆணையத்தின் திட்டம். இதையடுத்து, தமிழகத்தில், ஏப்ரல் மாதத்தில், ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என்கின்றனர், தேர்தல் ஆணைய அதிகாரிகள்.


சிக்கன சுதந்திர தின விழா



கொரோனா பிரச்னையால், மத்திய அரசு, விழாக்களைக் குறைத்துள்ளது. மிகவும் முக்கியமான அரசு நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படும். 'குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இது போன்ற நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும்; கூட்டம் சேர்க்கக் கூடாது' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 'இந்த விழாக்களில் அதிக செலவு செய்யக் கூடாது; சிக்கனமாக இருக்க வேண்டும்' எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட், 15ம் தேதி, இந்திய சுதந்திர தினத்தன்று, டில்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவது வழக்கம். மோடி பிரதமராக பதவியேற்ற பின், ஏழாவது முறையாக, இந்த ஆண்டு, செங்கோட்டையில் கொடி ஏற்ற உள்ளார். இதற்கு முன், இந்த விழாவில், வெளிநாட்டு துாதர்கள், அமைச்சர்கள், ராணுவ தளபதிகள் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் உட்பட, 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், 1,200 பேர் மட்டுமே கலந்து கொள்வர் என, கூறப்படுகிறது. தவிர, பிரதமரின் நிகழ்ச்சிகளுக்கு செலவிடுவதையும் சிக்கனம் செய்ய, மோடி உத்தரவிட்டுள்ளாராம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X