பொது செய்தி

இந்தியா

சீன'பூச்சாண்டி'யை அலட்சியம் செய்து பணியை தொடர இந்தியா முடிவு

Updated : ஜூன் 02, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சீன'பூச்சாண்டி'யை அலட்சியம் செய்து பணியை தொடர இந்தியா முடிவு

புதுடில்லி : சீனாவுடனான எல்லையில் நிலவும் பதற்றத்தை பற்றி கவலைப்படாமல், சாலைகள் அமைக்கும் பணிகளை தொடர, இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் சாலை அமைப்பது, ராணுவ கட்டமைப்புகளை பலப்படுத்துவது போன்ற பணிகளை, சீனா ஏற்கனவே செய்து முடித்துள்ளது. இதேபோல் இந்தியாவும், எல்லை கட்டுப்பாடு கோட்டை ஒட்டிய தன் பகுதிக்குள், சாலை அமைப்பது, பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளை செய்து வருகிறது.

இதை, சீனா விரும்பவில்லை. எல்லையில் இந்திய ராணுவத்தின் பலம் அதிகரிப்பது, தனக்கு ஆபத்து என, சீனா புலம்புகிறது. இதனால், லடாக் மற்றும் வடக்கு சிக்கிமின் எல்லைப் பகுதியில், சீன ராணுவ வீரர்கள் அவ்வப்போது நம் வீரர்களுடன் மோதலிலும், கைகலப்பிலும் ஈடுபட்டு, 'பூச்சாண்டி' காட்டி வருகின்றனர். கடந்த, 5-ம் தேதி கிழக்கு லடாக்கில், இரு தரப்பு வீரர்களுக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, லடாக் எல்லையில் ராணுவத்தை சீனா குவித்து வருகிறது. திபெத் பகுதியில் உள்ள தன் விமான தளத்தை சீனா விரிவாக்கம் செய்து, அங்கு, போர் விமானங்களை நிறுத்தி இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்லையில் இந்தியாவும் ராணுவத்தை குவித்து வருகிறது.

இதனால், எல்லையில் பதற்றம் தொடர்ந்து நிலவுகிறது. இதற்கிடையில், சீனாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், லடாக் எல்லைப் பகுதியில் சாலை அமைப்பது உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள, இந்தியா முடிவு செய்தது.
அந்த பணிகளை செய்து முடித்தால், எல்லைப் பகுதியில், ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் விரைவாக அனுப்ப முடியும்.
இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து, ஜம்மு மற்றும் சண்டிகருக்கு வீரர்களை அனுப்ப, 11 சிறப்பு ரயில்களை இயக்குமாறு, ரயில்வே அமைச்சகத்திடம், ராணுவ அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது பற்றி, ராணுவ அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்திய - சீன எல்லையில் நிலவும் பதற்றத்தால், எல்லைப் பகுதிகளில், சாலைகள் அமைப்பது உட்பட, உள்கட்டமைப்பு பணிகளை நிறுத்துவதில் அர்த்தமில்லை.ஏனெனில், பதற்றம் உடனடியாக முடிவுக்கு வராது. பணிகள் செய்வதற்கு, இப்போது தான் சரியான காலம்; இதை வீணடிக்க முடியாது.

எல்லைகளில் சாலைகள் அமைக்கும் பணியில், 12 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதனால் தான், ஜார்க்கண்டிலிருந்து, ஜம்மு மற்றும் சண்டிகருக்கு சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளோம். லடாக், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், சாலைகள் அமைக்கும் பணியில் இந்த வீரர்கள் ஈடுபடுத்தப்படுவர். பெரும்பாலான வீரர்கள், ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SRINIVASALU - chennai,இந்தியா
03-ஜூன்-202012:50:15 IST Report Abuse
P. SRINIVASALU நல்ல தைரியமான முடிவு. வரவேற்க்கினேன். ஜைஹிந்த்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-ஜூன்-202020:08:49 IST Report Abuse
மலரின் மகள் சீனாவின் நிலை நமக்கு தெரியும். அவர்கள் ராணுவ பலம் மிக்கவர்கள் என்று உலகை நம்ப வைத்து கொண்டிருப்பார்கள். எல்லைகள் அனைத்திலும் அதை விரிவாக்கம் செய்வதற்கு முயன்று கொண்டே இருப்பார்கள். மங்கோலிய திபெத்துக்களை ஆக்கிரமித்தது போல இன்று சீனாவால் அண்டைய தேசம் எதனுடனும் வெற்றி பெறவே முடியாது என்பது உண்மை. மிரட்டி பார்ப்பார்கள். எப்படி என்றால் உள்ளூர் ரவுடிகள் வந்து குழாயடி சண்டை போல ஒரே கூச்சல் விட்டு சவடால் செய்வது போலவே. அந்த ரவுடிகளுக்கு நன்கு தெரியும் அவர்கள் செய்வது அராஜகம் என்றும், அப்படித்தான் எதிராளியை பயமுறுத்தி அவர்களின் உடைமைகளை கபளீகரம் செய்யலாம் என்று. சாதாரணமாக ஒரு போலீஸ் அங்கு வருவதை அறிந்தால் பம்மிவிடுவார்கள் அத்தகைய ரவுடிகள் பதில் அதட்டல் சற்று கூடுதல் சத்தத்தில் கொடுத்தால் வாழை சுருட்டி கொள்வார்கள். அப்படித்தான் இன்றைய சீனா. அவர்களிடம் மிக பெரிய ராணுவமும் நிறைய ஆயுதங்களும் நவீன தளவாடங்களும் உள்ளன. அது இருக்கும் அப்படியே இருக்கட்டும். யுத்தத்தில் வெல்வதற்கு அது மட்டுமே பயன்படாது. சீனாவை சுற்றி மிகவும் சிறையா மற்றும் பலமே அற்ற பல தேசங்கள் இருக்கின்றன, அனைத்தையும் அவர்கள் மிரட்டி பார்க்கிறார்கள். கடலையே தங்கள் சொந்தம் என்கிறார்கள். எந்த தேசத்தை அவர்களால் இன்று வெல்ல முடிந்தது? எந்த குட்டி தேசம் ராணுவ பலமே இல்லாத தேசம் அவர்களின் மிரட்டலுக்கு பயந்தது. அமெரிக்க ஜப்பான் ஆஸ்திரேலியா பிரிட்டன் என்று அந்த தேசம் அனைத்தும் இப்போது ராணுவ உறவுகளுக்கு சென்று விட்டன. தங்கள் பாதுகாப்பில் சீன அவர்களை அரவணைத்து மிக பிரமாண்டமான வல்லரசு என்று கொண்டு செல்வதற்கு பதிலாக அண்டைய தேசத்துடன் சச்சரவில் பகையையும் வளர்த்து கொள்வது அந்த தேசத்திற்கு பெரும் பிரச்சினையாகிவிடும் என்ற எளிய சிந்தனை கூட இல்லை அவர்ளுக்கு. இன்று சீனாவிற்கு அவர்களின் எல்லையை சுற்றியும் அச்சமிருக்கிறது என்று சொல்லவேண்டும். தைவான் வியட்நாம், பிலிப்பின் என்று அனைவரும் கூட அவர்களுக்கு முழுதும் எதிராக இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் ராணுவ உத்திகளை வெளிநாட்டு கொள்கைகளை சீனாவை மனதில் இருத்தி அவர்களுக்கு மாற்றாக செய்து கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டு பிரச்சினைக்கு வேறு அங்கு அதிகம். உள்நாட்டு மக்களை திருப்தி படுத்தாமல் எந்த அரசும் சிறப்பாக இருக்கமுடியாது. உள்நாட்டு கலவர்களாலேயே உள்நாட்டு யுத்தங்கள் மூண்டு பலநாடுகள் இன்று பரிதவிப்பதும் ஏழ்மையின் வறுமையோடு உறவாடுவதுமாக இருக்கின்ற நிர்பந்தங்கள். முதலாம் இரண்டாம் உலகப்போரில் நேரடியாக தீவிரமாக பங்கேற்ற நாடுகள் கூடு சில வருடங்களில் பெரியளவில் முன்னேறிவிட்டது. அதே நேரம் அண்டை நாடு உட்பட எந்த நாடுகளுடனும் போரிடாமல் உள்நாட்டு யுத்தம் கலவரம் என்று சிக்கி சின்னாபின்னாமான தேசங்களால் பத்தாண்டுகள் பலகடந்தும் எளிமையாகவே இருக்கின்றன என்பது உலக வரலாறு. திபெதியர்கள் சீனாவை விட்டு சுதந்திரமடைய காலம் கணத்தை நோக்கிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த திபெத் மக்களுக்கும் சீனாவை பிடிக்காது. உலகத்தின் கூரையில் அவர்களுக்கு சுதந்திரத்திற்காக யுத்தம் செய்வதற்கு நவீன தளவாடங்களும் போர்பயிற்சியும் வேண்டும். அதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். கொரில்லா பயிற்சி அவர்களுக்கு தேவை. கிடைத்தால் திபெத்தும் சீனாவும் அங்கம் என்று சொல்லி கொள்ளும் சீன்வற்குள் திபெத்தியர்கள் கலக்கம் செய்து திபெத்தை மீட்டெடுக்கவே செய்வார்கள். அது சீனாவிற்கு புரிந்து இருக்கிறது. யுத்தம் என்று ஒன்றை நடத்தி விட்டு இறுமாந்திருக்கமுடியாது. நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டே அதை நிலைநிறுத்தி கொண்டிருந்தாள் அவர்களுக்கு நலம் இல்லையேல், மலேசிய அடங்கிப்போனது நம்மிடத்தில் தெரியும் அவர்களுக்கும். இலங்கை மிக சிறிய தமிழ் ராணுவத்தை ஒன்றும் செய்யமுடியாமல் அவர்களுக்கு அஞ்சியே காலம்கடத்தியதற்கு என்ன காரணம் என்று சீனாவும் அறியும். இலங்கைக்கு சீன பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் பெரியண்ணனுடனும் ராணுவ உதவிகளை பெற்று தமிழ் ராணுவத்தை கட்டுப்படுத்தமுயன்று தோற்று இறுதியில் நம்மிடம் சமரசம் பெற்று நம் உதவியுடன் தான் அங்கு அமைதியானார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவை மிகவும் நெருங்கி இந்தியாவில் நம்பிக்கையில் இருந்து இந்தியாவின் உதவியால் வாழும் திபெத்தியர்களுக்கு இந்தியாவின் கொரில்லா யுத்த பயிற்சி, ராணுவ தளவாடங்கள் கிடைக்காத என்று க்ரோயிம் இஞ்சியும் வருவது உலக நாடுகளுக்கு குறிப்பாக சீனாவிற்கும் நன்கு தெரியும். உலகளாவிய தேசங்களில் பறந்து கிடைக்கும் திபெத்தியர்கள் உணர்வான சுதந்திர திபெத் உருவாகிவிடும் நம்மை சீன எதிரி நாடு என்று யுத்தம் செய்தால். சீனாவிற்கு இன்று வேறு வழியில்லை தான். நம்முடன் பொருளாதார லாபம் அவர்களுக்கு கிடைக்கிறது. அவர்கள் நமக்கு தருகின்ற பல பொருட்களை நமது குடிசை தொழில் மூலம் செய்து விடலாம். சீனாவின் பனி குல்லாய்கள், பொம்மைகள், ரிமோட் விளையாட்டு பொருட்களை நமது குடிசை தொழிலாக தாராளமாக செய்துவிடலாம். பழைய அரசின் தவறான பொருளாதார அரசியல் சுய லாப செய்கைகளால் சீன லாபம் பெற்றது. இன்றைய அரசு அதை மாற்று கிறது. சுய தொழில் சார்பு சுய வாழ்க்கைக்கு உத்திரவாதம், நமக்கு வேண்டியவற்றை நாமே தயாரித்து கொள்வது, நம்மால் தயாரிக்க முடிவதை சீன்வலிருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்று கொள்கை மாறுகிறது அரசு. சானிடரி நாப்கின் கூட சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யவேண்டுமா. அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடைகளை நமக்கு தேவைக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யவேண்டுமா? கம்பனிகளின் பின்னண்டியில் இருந்து கொண்டு சுயலாபம் பெட்ரா அரசியல் தலைகளால் வந்த ஆபத்துக்கள் இன்று நிச்சயம் மாறும். கடந்த ஐந்தே வருடங்களில் நமது வட கிழக்கு எல்லைப்பகுதிகளும், காஸ்மீர் லடாக் பகுதிகளும் எவ்வளவு ராணுவ பாதுகாப்பை பலப்படுத்தின என்று சீன நன்கு அறிந்து கொண்டிருக்கிறது. உலகத்திற்கும் தெரியும். ஒரு குறிப்பிட்ட தேசத்தை மட்டுமே சேர்ந்து ராணுவ தளவாட இறக்குமதி செய்யாமல், அனைத்து சிறந்த ராணுவ தளவாட உற்பத்தி செய்யும் தேசத்துடனும் நட்புறவு கொண்டு உலகை தங்களுக்கு அந்நியோன்னியமானவர்களாக செய்து கொண்டு அதன் மூலம் அவர்களின் சிறந்த தயாரிப்புக்கள் பெருமளவில் வாங்கி குவித்து வைத்திருக்கிறோம். ஆப்கான் நம்முடைய நட்பு நாடாகவும் அவர்கள் பகுதியில் நமது ராணுவ பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு என்று எத்துணையோ செய்து அங்கு நாம் நன்கு நிலை கொண்டிருக்கிறோம். சீனாவை சுற்றிய அனைத்து தேசங்களும் நம்முடன் நட்பு பாராட்டு கின்றன. ராணுவ பலம் நிரம்பி இருக்கிறது. நாம் யுத்தம் செய்வது என்பது இமைய மலை உச்சியில் ஆரம்பித்து அதற்கு வடக்கு பகுதியில் என்று இருக்கும். யுத்தம் என்று வந்தால் இழப்புக்கள் தவிர்க்க முடியாதது அனைத்து பக்கங்களிலும். அனால் அதனால் முழு சுதந்திரமும் அச்சமற்ற எதிர்கால சமுதாயமும், உலகின் பலம் பொருந்திய ராணுவம் இந்தியர்களுடையது, அவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்பதை உலகம் வியக்க வகையும் பிறக்கும். நாம் நமது பலத்தை நிரூபிக்க இல்லை மற்றபடி நமது பலம் மிகவும் உயர்ந்தது. சந்திரனுக்கு ஏவுகணைகளை அனுப்பிய பிறகு, மென்பொருள் தொழில்நுட்பத்தில் வெற்றி கொண்ட பிறகு உலகு நம்மை புரிந்து கொண்டிருக்கிறது. பண்டைய நேரு காலத்து சீனாவுடனனான ஏமாற்று சதி வென்ற போரை தவிர்த்து அதன் பிறகு அனைத்து யுத்தத்திலும் வெற்றி பெற்றிருக்கிறோம். மறைமுகமாக நாம் செய்த சில யுத்தங்கள் உலக வல்லரசுக்களுக்கு நன்கு தெரியும் எப்படி சாமர்த்தியமாக காய்நகர்த்தி வென்றிருக்கிறார்கள். ஓரிரவில் சில தேசங்களை மறு விடுதலை அடைய செய்திருக்கிறோம். சீன அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாக நம்முடைய எல்லை நோக்கி வருவதும் திரும்புவதும் சில அல்டாப் வேலைகளை செய்வதும் திரும்புவதுமாக இருந்து கொண்டே இருக்கிறது. அவர்களின் மேப்கலை வேண்டுமானால் மாற்றி காட்டி கொண்டே இருக்கும். ஒருபோதும் துப்பாக்கிக்களை பீரங்கிகளை நீட்டது. பாக்கித்தான் வேண்டுமானால் எதாவது வெடி சத்தமிட்டு கொண்டிருக்கும். சீன ஒரு விஸ ஜந்து. விஷம் காக்கும் அந்த ஜந்துக்கள் இறந்து போகும் என்பது அதற்கு எழுதப்பட்ட விதி. அதற்குரிய காட்டில் அதற்குரிய சிறு பூச்சிகளை உண்டு வாழவேண்டும் என்று தான் அதற்கு விதிக்கப்பட்டிருக்கும். மனிதர்கள் வாழும் பகுதியில் உளவரக்கூடாது.
Rate this:
Cancel
Kalam - Salem,இந்தியா
01-ஜூன்-202014:42:54 IST Report Abuse
Kalam சீனா வேற ஏதோ திசை திருப்பும் நடவடிக்கைக்கு இதெல்லாம் செய்கிறது. சீனா பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்த ஒரு திட்டம் தீட்டனும். அவ்வளோ சீன பொருட்கள் குவிஞ்சு கெடக்கு மார்க்கெட்டுல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X