அரசியல் செய்தி

தமிழ்நாடு

33 மாவட்டங்களில் நீங்குகிறது கட்டுப்பாடு நிம்மதி!

Updated : மே 31, 2020 | Added : மே 31, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
tamil nadu, tn news, coronavirus lockdown, unlock 1.0

சென்னை : தமிழகத்தில் 33 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் நீங்குவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அப்பகுதியினரின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளது. பஸ், ஆட்டோ, டாக்சி, சலுான் என அனைத்தும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கூட்டம் கூடுவதற்கு மட்டும் தடை தொடர்கிறது.
தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்தி மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 நள்ளிரவு 12:00 மணி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. 144 தடையுத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.
தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். அனைத்து தொழில்
மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க
வேண்டும்.


இவற்றுக்கு தடை தொடரும்* வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது
* ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணியர் செல்லக்கூடாது
* தங்கும் வசதிடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் பிற விருந்தோம்பல் சேவைகள் கிடையாது; இதில் தனிமைப்படுத்தும் பணிகளுக்கு மட்டும் விலக்கு
* வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி இல்லை. இந்நிறுவனங்கள் இணையவழி கல்வி கற்றலை தொடர்வதுடன் அதை ஊக்கப்படுத்தலாம்
* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்
* மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களுக்கு தடை தொடரும்
* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் கிடையாது
* இந்த கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு படிப்படியாக தளர்த்தப்படும்
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது


இன்று முதல் இதற்கு அனுமதிசென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் இன்று முதல் சில பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம்:
* தொழில் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ௧௦௦ சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். முடிந்த வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்
* வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். 'ஏசி' இயக்கப்படக்கூடாது
* டீக்கடைகள் உணவு விடுதிகள் காய்கறி கடைகள் மளிகை கடைகள் காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கலாம். 'டாஸ்மாக்' உள்ளிட்ட இதர கடைகள் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படலாம்
* வரும் 8ம் தேதி முதல் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கலாம்; 'ஏசி' இயக்கப்படக்கூடாது.
* ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அனைத்து பொருட்களையும் விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
* வாடகை டாக்சியில் டிரைவர் தவிர்த்து மூன்று பயணியர்; ஆட்டோக்களில் இரண்டு பயணியர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக் ஷாவும் இயங்கலாம்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


இ - பாஸ் முறைமண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு 'இ- - பாஸ்'தேவையில்லை. பஸ்களில் பயணிக்கவும் 'இ- - பாஸ்' அவசியமில்லை.மண்டலங்களுக்கு இடையிலும் மாநிலங்களுக்கு இடையிலும் பஸ் போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது.அனைத்து வகையான வாகனங்களும் மண்டலங்களுக்குள் இயக்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ- - பாஸ் தேவையில்லை.
வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும் அங்கிருந்து வரவும் மண்டலங்களுக்கு இடையில் சென்று வரவும் 'இ- - பாஸ்' முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X